×

சுகாதார கேடு ஏற்படும் அபாயம் சோதனை சாவடிகளில் தடையின்றி செல்லும் இறைச்சி கழிவு வாகனங்கள்

ஆரல்வாய்மொழி: கேரளாவில் இருந்து குமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களுக்கு கோழி கழிவுகள் அதிக அளவில் கொண்டு செல்லப்பட்டு வந்தது. இதனால் அந்த வாகனத்தில் இருந்து விழும் கழிவுகள், கழிவுநீர் ரோட்டில் விழுவதால் துர்நாற்றமும், சுகாதார கேடும் ஏற்பட்டது. இதனால் காவல்துறை குமரி மாவட்ட எல்லையில் உள்ள சோதனை சாவடிகளில் வாகனங்களை சோதனை செய்து அந்தந்த பகுதி பேரூராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு வந்தது.இந்த கழிவுகளை ஏற்றி வருவதற்கு தனி ஏஜென்சி செயல்படுவதாகவும், வாகனங்களுக்கு அதிகளவில் வாடகை வசூலிப்பதால் கோழி கழிவுகளை ஏற்றி வருவதற்கு வாகனங்களை வைத்து இருப்பவர்கள் ஆர்வமாக முன்வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது சோதனை சாவடிகளில் கேரளாவில் இருந்து வரும் கோழி கழிகள் தடையின்றி செல்வதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

கேரளாவில் இருந்து நெடுமங்காடு-ஆரல்வாய்மொழி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 3 சோதனை சாவடிகள் உள்ளன. நெடுமங்காட்டில் இருந்து வரும் சாலையில் களியலுக்கு முன்பாக நெட்டா சோதனை சாவடியும், அருமனையில் இருந்து களியல் வரும் சாலையில் செறியகொல்லா சோதனை சாவடியும், ஆரல்வாய்மொழியில் சோதனை சாவடியும் உள்ளன. இந்த நிலையில் இன்று காலை நெடுமங்காடு-ஆரல்வாய்மொழி தேசிய நெடுஞ்சாலையில் கேரளாவில் இருந்து நெட்டா அல்லது செறியகொல்லா சோதனை  சாவடிகளை கடந்து குலசேகரம், திற்பரப்பு, தடிக்காரன்கோணம், ேகசவன்புதூர், பூதப்பாண்டி, சீதப்பால், செண்பகராமன்புதூர், ஆரல்வாய்மொழி ஆகிய குடியிருப்பு பகுதிகள் வழியாக அதிக துர்நாற்றம் வீசியபடி கழிவுநீரை ரோட்டில் சிந்தியவாறு ஆரல்வாய்மொழி சோதனை சாவடியை தடையின்றி ஒரு வாகனம் கடந்து சென்றது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாயினர்.

இந்த கழிவு ஏற்றிய வாகனம் சென்ற பின்பும் கழிவுநீர் ரோட்டில் சிதறி கிடந்ததால் துர்நாற்றம் வீசி கொண்டிருந்தது. இதனால் சுகாதார கேடு ஏற்படும்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மாவட்ட காவல்துறை நிர்வாகம் கேரள எல்லையில் உள்ள சோதனை சாவடிகளில் கழிவுகளை ஏற்றி வரும் வாகனங்கள் குமரி மாவட்டத்திற்குள் வராதவாறு வாகன சோதனையில் ஈடுபட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED தாம்பரம் அருகே உணவகத்தில் தீ விபத்து..!!