×

சில்லி பாயின்ட்...

* உலக கோப்பையில் படுதோல்வி அடைந்ததை அடுத்து அர்ஜென்டினா அணி பயிற்சியாளர் ஜார்ஜ் சம்போலி தனது பதவியை ராஜினாமா  செய்துள்ளார்.
* ஜுவென்டஸ் கிளப் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ (போர்ச்சுகல்), இதற்கான  அறிமுக நிகழ்ச்சிக்காக இத்தாலி சென்றுள்ளார். அவருக்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு நாட்டில் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
* உலக கோப்பை போட்டிகளை பார்ப்பதற்காக ரஷ்யா வந்துள்ள வெளிநாட்டு ரசிகர்கள் இந்த ஆண்டு இறுதி வரை எத்தனை முறை வேண்டுமானாலும்  ரஷ்யாவுக்கு வந்து செல்லலாம் என்று அதிபர் புடின் சலுகை
அளித்துள்ளார்.
* ஜிம்பாப்வே அணிக்கு எதிராக நேற்று நடந்த 2வது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் 9 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றது. டாசில்  வென்று பேட் செய்த ஜிம்பாப்வே 49.2 ஓவரில் 184 ரன்னுக்கு ஆல் அவுட்டானது (கேப்டன் மசகட்சா 59, பீட்டர் மூர் 50 ரன் எடுத்தனர். பாகிஸ்தான்  பந்துவீச்சில் உஸ்மான் கான் 4, ஹசன் அலி 3, மாலிக் 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் 36 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு  195 ரன் எடுத்தது (இமாம் உல் ஹக் 44, பஹார் ஸமான் 117*, பாபர் 29*).
* இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தற்காலிக பயிற்சியாளராக முன்னாள் ஸ்பின்னர் ரமேஷ் பொவார் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED ஸ்டொய்னிஸ் 124, கெய்க்வாட் 108* ரன் விளாசல் வீண்: சென்னையை வீழ்த்தியது லக்னோ