×

நாளை மறுநாள் மழைக்கால கூட்டத்தொடர் ராஜ்யசபா தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர் யார்?: அருண்ஜெட்லி ஓய்வில் இருப்பதால் குழப்பம்

புதுடெல்லி: நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையின் 250 எம்பிக்களில், 12 பேர் குடியரசு தலைவரால் நியமிக்கப்படுவார்கள். அவையின் தலைவராக குடியரசு துணை தலைவரான வெங்கையா நாயுடு இருப்பார். துணை தலைவராக குரியன் இருந்தார். இவருடைய பதிவிக்காலம் கடந்த 2ம் தேதியுடன் முடிவடைந்ததால், புதிய துணைத்தலைவரை தேர்வு செய்யப்படவில்லை. இந்நிலையில், நாளை மறுநாள் (ஜூலை 18) மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குகிறது. வரும் ஆகஸ்ட் 10ம் தேதி வரை கூட்டத்தொடர் நடக்கிறது. இந்த கூட்டத்தொடரில் பல்வேறு திட்டங்களுக்கான மசோதவை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் ராஜ்யசபா தலைவராக நிதியமைச்சர் அருண்ஜெட்லி பதவி வகித்து வருகிறார்.

எதிர்க்கட்சி தலைவராக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் உள்ளார். அருண்ஜெட்லி, கடந்த மே 14ம் தேதி, கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டு, தற்போது ஓய்வெடுத்து வருகிறார். இவரது நிதியமைச்சர் பொறுப்புகளை, கூடுதல் பொறுப்பாக மின்துறை அமைச்சர் பியூஸ் கோயல் கவனித்து வருகிறார். அருண் ஜெட்லி ராஜ்யசபா தலைவர் பதவியை வகித்து வந்ததால், அந்த வேலையையும் பியூஸ் கோயல் கவனிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஆனால், அவருக்கு போதிய அனுபவமில்லை என்று கட்சியின் மூத்த நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். எதிர்க்கட்சிகள் சார்பில், தலாக் விவகாரம், ஜம்மு காஷ்மீர் பிரச்னை, வாட்ஸ் வதந்தியால் உயிர்பலி, தீவிரவாத தாக்குதல் போன்ற பிரச்னைகளை கிளப்ப உள்ள நிலையில், அவர்களுக்கு இணையாக பதில் கூற ஆளுங்கட்சியின் தலைவர் அவையில் இல்லாத சூழல் ஏற்பட்டதால், ஆளும் தரப்பில் குழப்பம் நீடிக்கிறது.

மேலும், நிதித்துறை சார்ந்த கேள்விகளுக்கு பொறுப்பு அமைச்சர் பதில் கூறினாலும், அவை உறுப்பினர்கள் திருப்தி அடையாத நிலை ஏற்பட்டுள்ளது. முன்னாள் விளையாட்டு துறை அமைச்சர் விஜய் கோல், தேசிய ஜனநாயக கூட்டணியின் ராஜ்ய சபா தலைவர் பதவியை கவனிப்பார் என்று, அமித் ஷா தெரிவித்துள்ளார். ஆனாலும், எதிர்க்கட்சியின் வரிசையில் அமர்ந்திருக்கும் மன்மோகன்சிங், குலாம்நபி ஆசாத், ப.சிதம்பரம், அம்பிகா சோனி போன்றோர் முன், விஜய் கோலும் போதிய அனுபவமற்றவர் என்றே கூறப்படுகிறது. இதுகுறித்து, பாஜ மூத்த நிர்வாகிகள் கூறுகையில், ‘அருண் ஜெட்லி இடத்தை தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பூர்த்தி செய்வார் என்று நினைக்கிறோம்.

இன்னும் 3 கூட்டத்தொடர் தான்! மழைக்கால கூட்டத்ெதாடர் குறித்து, சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கூறியதாவது:- நான் வெளிநாடுகளுக்கு சென்றபோது, அங்குள்ள இந்திய வம்சாவளியினரை சந்தித்தேன். அவர்கள், இந்திய நாடாளுமன்றம் அடிக்கடி முடங்குவது குறித்து கவலை தெரிவித்தனர். மக்களவை பதவிக்காலத்தின் கடைசி ஆண்டில் நாம் நுழைந்துள்ளோம். இன்னும் 3 கூட்டத்தொடர்கள்தான் உள்ளன. அவற்றிலும், மழைக்கால கூட்டத்தொடரிலும், குளிர்கால கூட்டத்தொடரிலும் தான் மசோதா தொடர்பான பணிகளை கவனிக்க முடியும். கட்சி மேலிடத்தின் செல்வாக்குடன், வேட்பாளரின் நற்பெயரும் தொகுதியில் முக்கிய பங்கு வகிக்கிறது.

கட்சி மேலிடத்தின் செல்வாக்கால் மட்டுமே தொகுதியில் வெற்றி பெற முடியாது. எனவே, எம்பிக்கள் தங்களது நாடாளுமன்ற கடமைகளை ஆற்ற அனுமதிக்க வேண்டும். அப்போதுதான் வாக்காளர்களின் நம்பிக்கையை அவர்கள் பெற முடியும். எதிர்க்கட்சிகளின் ஆலோனைகளை பரிசீலிக்க தயாராக இருக்கிறேன். நாடாளுமன்றத்தின் கண்ணியத்தை பாதுகாப்பது அவசியம்.இவ்வாறு அவர் கூறினார்.

எதிர்க்கட்சிகள் ஆலோசனை: நாளை மறுநாள் நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில், ராஜ்சபா துணைத் தலைவரை தேர்வு செய்தல், ஆளுங்கட்சிக்கு எதிராக கூட்டத்தொடரில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்த, காங்கிரஸ் கட்சியின் தலைமையில் இன்று மாலை எதிர்க்கட்சிகளுடன் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் தலைமை வகிக்கிறார். ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், கட்சியின் தலைவர் ராகுல்காந்தி, மல்லிகார்ஜனே கார்கே உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். மேலும், தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த தலைவர்களும் பங்கேற்க உள்ளனர். இதேபோல், பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனை கூட்டமும் மாலையில் நடக்கிறது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED போலியான அறிவிப்புகளை மாணவர்கள் நம்ப வேண்டாம்: யுஜிசி எச்சரிக்கை