×

எஸ்.டி.பி.ஐ. கட்சி பொதுக்குழு கூட்டம் தேசிய துணை தலைவராக தெகலான் பாகவி தேர்வு

சென்னை: எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய துணை தலைவராக தமிழகத்தை சேர்ந்த தெகலான் பாகவி தேர்வு செய்யப்பட்டுள்ளார். எஸ்.டி.பி.ஐ. கட்சியின் இரண்டு நாள் தேசிய பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதை தொடர்ந்து புதிய தேசிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடந்தது. எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய தேர்தல் அதிகாரி முகமது ஷாகிப் தேர்தலை நடத்தினார். அதன்படி நடந்த தேர்தல் முடிவில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் புதிய தேசிய தலைவராக கேரளாவை சேர்ந்த எம்.கே.பைஜியும், தேசிய துணைத் தலைவராக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தமிழ் மாநில துணை தலைவரான கே.கே.எஸ்.எம்.தெகலான் பாகவியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தேசிய பொதுச் செயலாளர்களாக ராஜஸ்தானை சேர்ந்த முகம்மது ஷபி, மைசூரை சேர்ந்த அப்துல் மஜீத் ஆகியோரும், தேசிய செயலாளர்களாக அப்துல் வாரிஸ் (ஆந்திரா), அல்போன்ஸோ ப்ரன்கோ (கர்நாடகா), டாக்டர் மகமூத் ஷெரிப் ஆவாத் (கர்நாடகா), யாஸ்மின் பரூக்கி (ராஜஸ்தான்), சீதாராம் கோய்வால் (ராஜஸ்தான்) ஆகியோரும், பொருளாளராக மத்திய பிரதேசத்தை சேர்ந்த வழக்கறிஞர் ஷாஜித் சித்திக்கீயும் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தமிழ் மாநில தலைவர் முகமது முபாரக், பொதுச் செயலாளர்கள் நிஜாம் முகைதீன், அப்துல் ஹமீது, மாநில செயற்குழு உறுப்பினர் அப்துல் சத்தார் உட்பட 32 பேர் தேசிய செயற்குழு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா; 45...