பெண்களுக்கு ஆபத்து நிறைந்த நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடமா... : மத்திய அரசு திட்டவட்ட மறுப்பு

டெல்லி: லண்டனைச் சேர்ந்த தனியார் அமைப்பு வெளியிட்ட ஆய்வறிக்கை ஒன்றில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவும் மற்றும் ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளதாக கூறியது. ஆனால் இந்த அறிக்கைக்கு இந்தியா திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், எந்த புள்ளிவிபரமும் இல்லாமல் தனியார் அமைப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளது. உரிய முறையில் கருத்து கணிப்பு நடத்தாமல் பிற நாட்டினருக்கு இந்தியா மீது தீய கெட்ட எண்ணத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இந்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக சாடியுள்ளது. 15 முதல் 19 வயதிலான பெண்கள் தாய்மை அடைவது 2015 - 16 ம் ஆண்டிலேயே 7.9 சதவீதமாக குறைக்கப்பட்டு விட்டதாக கூறியுள்ளது. பாலியல் பலாத்கார குற்றங்கள் இந்தியாவில் 1000 பேருக்கு 0.03%-ஆக உள்ளது. ஆனால் அமெரிக்காவில் 1.2% பலாத்காரங்கள் நடக்கின்றன. மேலும் பெண்களுக்கான திருமண வயது அனைத்து நாடுகளிலும் ஒரே மாதிரி இருப்பதில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

Advertising
Advertising

முன்னதாக லண்டனைச் சேர்ந்த தாம்சன் ராய்டர்ஸ் பவுண்டேஷன் சார்பில் உலக அளவில்  பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 548 வல்லுநர்களிடம்  ஆன்லைன், தொலைபேசி, நேரடியாகவும் கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. கடந்த மார்ச் 26ம் தேதியில் இருந்து மே 4ம் தேதி வரை நடத்தப்பட்ட இந்த  கருத்து கணிப்பின் முடிவை ராய்டர்ஸ் பவுண்டேஷன் சமீபத்தில் வெளியிட்டது. இந்த ஆய்வு முடிவில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவும் மற்றும் ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளதாக கூறியுள்ளது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. சிரியாவை விடவும் பெண்களுக்கு மிகுந்த ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய நாடு இந்தியா என ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த ஆய்வறிக்கையை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம்- பதிவு இலவசம்!

Related Stories: