×

விமானத்தில் நடிகர் கேப்டன் ராஜுவுக்கு நெஞ்சு வலி

சென்னை: விமானத்தில் நடிகர் கேப்டன் ராஜுவுக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டது. விமானம் தரையிறக்கப்பட்டு அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நல்ல நாள், கடமை கண்ணியம் கட்டுப்பாடு, ஜல்லிக்கட்டு, தர்மத்தின் தலைவன், சூரசாம்ஹாரம் உள்பட பல படங்களில் வில்லனாக நடித்தவர் கேப்டன் ராஜு. தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் 500க்கு அதிகமான படங்களில் நடித்துள்ளார். இவர் மஸ்கட்டில் தங்கியிருந்தார். நேற்று அங்கிருந்து அமெரிக்கா செல்ல விமானம் ஏறினார். புறப்பட்ட பின் திடீரென கேப்டன் ராஜுவுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து விமானம் ஓமனில் தரையிறக்கப்பட்டது. உடனடியாக கேப்டன் ராஜு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...