×

ஆய்வுப்பணியை தடுத்தால் 7 ஆண்டுகள் சிறை கவர்னரின் மிரட்டலுக்கு தமிழர்கள் அஞ்ச மாட்டார்கள்

நாகர்கோவில் : ஆய்வு பணியை தடுத்தால் 7 ஆண்டுகள் சிறை என்ற மிரட்டலுக்கு தமிழர்கள் அஞ்ச மாட்டார்கள் என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கூறினார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை செங்குறிச்சி சுங்கச்சாவடியை சூறையாடியதாக வேல்முருகனை கடந்த மாதம் 26ம்தேதி போலீசார் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் வேல்முருகனுக்கு ஜாமீன் கொடுத்த சென்னை ஐகோர்ட் மறு உத்தரவு வரும்வரை வேல்முருகன், நாகர்கோவிலில் உள்ள கோட்டார் காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் விதித்து உத்தரவிட்டது.அதன்படி வேல்முருகன் நேற்று காலை 10 மணியளவில் கோட்டார் காவல் நிலையம் ஆஜராகி கையெழுத்திட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது :

மத்திய அரசுக்கு எதிராக போராடி வருவதால், என்னை போலீசார் கைது செய்துள்ளனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, மத்திய அரசு என்ன சொல்கிறதோ, அதன்படி செயல்பட்டு கொண்டிருக்கிறார். அவருக்கு அடுத்த தேர்தலில் டெபாசிட் கூட கிடைக்காது. மாவட்டங்களில் ஆய்வு செய்வதை தடுத்தால் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று கவர்னர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த மிரட்டலுக்கு தமிழர்கள் அஞ்ச மாட்டார்கள்.
பசுமை வழிச்சாலை திட்டத்துக்கு விவசாயிகளே முன்வந்து நிலத்தை கொடுப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பது மிகப்பெரிய வடிகட்டிய பொய். பசுமை வழி சாலையில் சுங்கசாவடி அமைக்க மாட்டோம் என்று முதல்வரால் கூற முடியுமா? மத்திய அரசை எதிர்த்து போராடுபவர்களையெல்லாம் பயங்கரவாதிகள் என மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன்  கூறி வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக...