×

நீர்வரத்து 10,200 கனஅடியாக சரிவு ஒகேனக்கல்லில் 3வது நாளாக பரிசல் இயக்க தடை நீடிப்பு

பென்னாகரம்: ஒகேனக்கல் காவிரியில் வரும் நீரின் அளவு விநாடிக்கு 10,200 கனஅடியாக சரிந்துள்ளது. இதனால், அங்கு 3வது நாளாக பரிசல் இயக்க தடை நீடிக்கப்பட்டது. காவிரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் பருவமழை காரணமாக, கர்நாடகாவில் உள்ள கபினி அணை முழு கொள்ளளவை எட்டிய நிலையில் அணையிலிருந்து உபரிநீர் மீண்டும் கடந்த 2 தினங்களுக்கு முன்பு காவிரியில் திறக்கப்பட்டது. இதனால், ஒகேனக்கல் காவிரியில் நேற்று முன்தினம் விநாடிக்கு 14 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. நேற்று விநாடிக்கு 10,200 கனஅடியாக சரிந்தது. இதையடுத்து, மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விலக்கப்பட்டது. ஆனால் பரிசல் சவாரிக்கு 3வது நாளாக தடை நீடித்தது.

மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 18,428 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று விநாடிக்கு 13,694 கனஅடியாக சரிந்தது. அணையில் இருந்து விநாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் 53.04 அடியாக இருந்தது. நேற்று 54.71 அடியாக உயர்ந்தது. நீர்இருப்பு 20.90 டிஎம்சியாக உள்ளது. நீர்மட்டம் ஒரே வாரத்தில் 14 அடி வரை உயர்ந்துள்ளதால், வெளியூர் சென்றிருந்த மீனவர்கள் மீண்டும் மேட்டூர் அணையின் காவிரி கரையில் முகாமிட்டு, மீன்பிடி தொழிலை தொடங்கியுள்ளனர்.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...