×

ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வு(JEE ADVANCED): முதல் 500 இடங்களில் மாணவிகள் எண்ணிக்கை வெறும் 14!

டெல்லி: ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வான ஜே.இ.இ அட்வான்ஸ்டு தேர்வில் (IIT - JEE) முதல் 500 இடங்களில் 14 மாணவிகள் மட்டுமே இடம் பிடித்துள்ளது தெரிய வந்துள்ளது. நாடு முழுவதும் ஐ.ஐ.டி.யில் சேர்வதற்காக நடத்தப்பட்ட ஜே.இ.இ அட்வாஸ்டு நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற முதல் 500 இடங்களில் மாணவிகளின் எண்ணிக்கை வெறும் 14ஆக உள்ளது. அதேபோல் முதல் 1,000 இடங்களை பிடித்தவர்களில் மாணவிகளின் எண்ணிக்கை 46ஆக உள்ளது. கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 68 ஆக இருந்துள்ளது.

முதல் 5,000 இடங்களில் 410 மாணவிகளும், 10,000 இடங்களில் 935 மாணவிகளும் இடம் பிடித்துள்ளனர். ஐ.ஐ.டி. போன்ற நிறுவனங்களில் மாணவிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கையை எடுத்து வருகிறது. இந்த ஆண்டு ஐ.ஐ.டி.களில் பயிலும் மாணவிகளின் எண்ணிக்கையை 8% உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது. அடுத்த ஆண்டில் 17% ஆகவும், 2020ஆம் ஆண்டில் 20% ஆகவும் உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை: பாஜக...