×

சிவகாசியில் டாஸ்மாக் மது குடித்த சிறுவன் உட்பட 4 பேர் பலியான விவகாரம் : உயிரிழந்தவரின் சகோதரி உட்பட 2 பேர் கைது

சிவகாசி: சிவகாசி அருகே கோழிவறுவலில் விஷம் வைத்து 4 பேரை கொன்ற விவகாரத்தில் உயிரிழந்தவரின் சகோதரி உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  டாஸ்மாக் கடையில் மது வாங்கி குடித்த சிறுவன் உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சிவகாசியில் பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. மேலும் 4 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.விருதுநகர் மாவட்டம், சிவகாசி காமராஜர்புரம் காலனியை சேர்ந்தவர் கணேசன் (20). இவரும், இவரது நண்பர்கள் லிங்கபுரம் காலனி கவுதமன் (15), வேலாயுத ரஸ்தா பகுதியை சேர்ந்த முகமது இப்ராஹீம் (22) முத்துராமலிங்கபுரம் காலனியை சேர்ந்த அய்யப்பன் (22),  இவரது அண்ணன் முருகன் (25), அத்திகுளம் அந்தோனி (எ) ஹரிஹரன் (22), விஸ்வநத்தம் சரவணன் (23), காமராஜர்புரம் காலனி ராஜன் (14, பெயர்  மாற்றப்பட்டுள்ளது) ஆகியோர் குற்றாலம் போய்விட்டு வருவதாக தங்களது வீடுகளில் நேற்றுமுன்தினம் கூறிவிட்டு, வீட்டை விட்டு கிளம்பி  வந்துள்ளனர். சிவகாசி பஜார் பகுதியில் உள்ள பராசக்தி காலனி, அரசு டாஸ்மாக் கடையில் நேற்றுமுன்தினம் இரவு மது வாங்கிக்கொண்டு அருகில் உள்ள சிறுகுளம் கண்மாயில் அமர்ந்து விடிய, விடிய மது அருந்தியுள்ளனர்.

நேற்று காலை அனைவரும் வீடு திரும்பிய நிலையில்  கணேசன், கவுதமன், முகமது இப்ராஹீம் மட்டும் அங்கேயே மயங்கி கிடந்துள்ளனர். இதனை கவனித்த கணேசனின் உறவினர் சக்திவேல்  மயக்கமடைந்த மூன்று பேரையும் ஆட்டோவில் ஏற்றி சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள்  அவர்கள் மூவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இந்த சம்பவம் நடைபெற்ற சிறிது நேரத்தில், மது குடித்துவிட்டு வீடு திரும்பிய அய்யப்பன், அவரது அண்ணன் முருகன், அந்தோணி (எ) ஹரிஹரன்,  சரவணன், ராஜன் ஆகியோர் தங்களது வீடுகளில் மயக்கமடைந்து கிடந்தனர். இதில் முருகன் அவரது வீட்டிலேயே இறந்துவிட்டார். மற்றவர்கள் ஒருவர்  பின் ஒருவராக சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் அய்யப்பன், ராஜன், சரவணன், அந்தோணி (எ) ஹரிஹரன் ஆகியோர்  மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இருவர் கைது

இந்த விவகாரம் தொடர்பாக விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜராஜன் தலைமையில் 7 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. முருகனின் சகோதரி வள்ளி மீது போலீசாருக்கு சந்தேகம் எழவே அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன. வள்ளிக்கும் அவர் பணிபுரிந்து வந்த  அச்சகத்தின் உரிமையாளர் செல்வத்திற்கும் தொடர்பு இருந்துள்ளது. இதனை கண்டித்ததால் முருகன் மீது வள்ளி கோபத்தில் இருந்துள்ளார். இந்த நிலையில் முருகன் குற்றாலம் செல்ல திட்டமிட்டு இருந்ததை சாதகமாக பயன்படுத்தி அவரை கொல்ல முடிவு செய்துள்ளார். அதன்படி முருகன் வாங்கி வந்த சிக்கனில் விஷத்தை கலந்துள்ளார். இதன்படி குற்றாலம் செல்வதற்கு முன் முருகன் தனது தம்பி மற்றும் நண்பர்களும் மது அருந்தும்போது விஷம் கலந்த சிக்கனை சாப்பிட்டதில் 4 பேர் இறந்தனர். வள்ளியைக் கைது செய்த காவல்துறையினர் கொலைக்கு வள்ளிக்கு உதவியதாக அச்சக உரிமையாளர் செல்வத்தையும் கைது செய்தனர். 


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED கோடை காலத்தையொட்டி மோர் விற்பனை 25% அதிகரிப்பு: ஆவின் நிர்வாகம் தகவல்