×

எல்லையில் போதைப்பொருள், ஆயுதங்கள் கடத்தல் சம்பவங்கள் 3 ஆண்டுகளில் அதிகரிப்பு : உள்துறை அமைச்சகம்

ஸ்ரீநகர் : எல்லைப் பகுதியில் போதைப்பொருள் மற்றும் ஆயுதங்கள் கடத்தல் போன்ற சம்பவங்கள் கடந்த 3 ஆண்டுகளில் அதிகரித்து இருப்பதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான், வங்கதேசம், பூட்டான், நேபாளம் மற்றும் மியான்மர் நாடுகளை ஒட்டி உள்ள எல்லைப் பகுதிகளில் இது போன்ற கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து இருப்பதாக இது தொடர்பாக உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது. கடந்த 2015ம் ஆண்டு 19,537 கடத்தல் சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில், 2017ல் 31, 593 ஆக அதிகரித்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2016ம் ஆண்டில் 23,198 கடத்தல் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கடத்தல் சம்பவம் தொடர்பாக 2015ம் ஆண்டு 1, 501 கைது செய்யப்பட்டிருந்த நிலையில், 2016ல் 1,893 ஆகவும், 2017ல் 2,299 ஆகவும் அந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் இந்தோ-பங்களாதேஷ் எல்லைப் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர். 4,000 கிமீ நீள இந்தோ-பங்களாதேஷ் எல்லைப் பகுதியில் 2015ல் 18,132 ஆக இருந்த கடத்தல் சம்பவங்கள் 2016ம் ஆண்டில் 21,771 ஆகவும் 2017ம் ஆண்டில்  29,693 ஆகவும் உயர்ந்துள்ளது.இதனிடையே இந்தோ-பங்களாதேஸ் எல்லைப் பகுதியில் கடத்தல் சம்பவங்கள் தொடர்பாக 2015ம் ஆண்டு 656 பேர் கைது  செய்யப்பட்டிருந்த நிலையில், 2016ம் ஆண்டு 751 பேரும், 2017ம் ஆண்டு 833பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED வயநாட்டில் மீண்டும் மாவோயிஸ்ட்டுகள் நடமாட்டம்..!!