×

உலகிலேயே மிக குறைந்த எடை கொண்ட செயற்கைக்கோள் : சென்னை பொறியியல் மாணவர்கள் உருவாக்கி சாதனை

சென்னை : உலகிலேயே மிகவும் எடை குறைந்த செயற்கைக்கோளை சென்னை மாணவர்கள் உருவாக்கி சாதனை படைத்துள்ளனர். கேளம்பாக்கத்தில் உள்ள ஹிந்துஸ்தான் தொழில்நுட்ப கல்லூரியில் ஹரிகிருஷ்ணன், அமர்நாத் கிரிபிரசாத் மற்றும் சுதி ஆகிய மாணவர்கள் ஏரோஸ்பேஸ் பொறியியல் பட்டப்படிப்பில் முதலாம் ஆண்டு பயின்று வருகின்றனர். புழல் பகுதியைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன் தலைமையிலான இந்த குழுவினர் 33. 39 கிராம் எடை கொண்ட செயற்கைக் கோளை உருவாக்கி உள்ளனர்.

ரூ. 15,000 செலவில் முழுக்க முழுக்க நைலானை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்த செயற்கைக் கோள் வானிலை நிலவரங்களை அறிவதற்கு பயன்பட உள்ளது. நாசா நடத்தும் குயூப்ஸ் இன் ஸ்பேஸ் போட்டியில் இந்த செயற்கைக் கோள் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் மாதம் பலூன் மூலம் இந்த செயற்கைக் கோளை நாசா விண்ணில் செலுத்துகிறது. 64கிராம் எடை கொண்ட செயற்கைக் கோளை இதுவரை குறைந்த எடை கொண்ட செயற்கைக் கோளாக கருதப்படும் நிலையில், அதனை சென்னை மாணவர்களின் இந்த சாதனை முறியடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் விமான...