×

டெல்லி-என்சிஆர் மண்டலத்தில் விரைவில் மெட்ரோவுடன் பொது போக்குவரத்து சேவை இணைக்கப்படும்: மத்திய அரசு

புதுடெல்லி: தொலைதூர இணைப்பை உறுதி செய்யும் விதமாக, டெல்லி-என்சிஆர் மண்டலத்தில் மெட்ரோவுடன் பொது போக்குவரத்து சேவை இணைக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுபற்றி மத்திய வீட்டு வசதி வாரிய அமைச்சகத்தின் அதிகாரி நிர்மல் யாதவ் கூறியதாவது: தலைநகர் மண்டலத்தில் மெட்ரோவுடன் பீடர் பஸ் சேவையை இணைத்து தொலைதூர  இணைப்பை உறுதி செய்யும்படியும், பொதுமக்களுக்கு உதவும் வகையில்  விரைவு ரயில் திட்டப்பணியை விரைந்து முடிக்கும்படியும், திட்டங்களை ஓராண்டுக்குள் நிறைவு செய்ய தனியே வர்த்தக நிறுவனத்தை ஏற்படுத்தும்படியும் மத்திய வீடு மற்றும் நகர்புற விவகாரத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி டெல்லி மெட்ரோ நிர்வாகத்துக்கு அறிவுறுத்தியிருந்தார்.

உத்தரவை ஏற்று டிஎம்ஆர்சியும் பீடர் பஸ்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. டெல்லி மற்றும் அதன் சுற்றுபுற பகுதிகளில் இயங்கும் டெல்லி போக்குவரத்து கழகம்(டிடீசி) பொதுமக்களுக்கு போக்குவரத்து சேவை செய்து கொடுப்பதில் அலட்சியமாக இருந்து வருகிறது. எனவே தொலைதூரத்தை இணைக்கும் பொறுப்பை டெல்லி மெட்ரோ செய்து முடிக்கும்படி புரி அறிவுறுத்தினார்’. இவ்வாறு அவர் கூறினார். மேலும்,  புதிதாக 427 பஸ்களை கொள்முதல் செய்யும் பணி நடந்து வருகிறது. பீடர் சேவைகளின் கீழ் 52 வழிதடங்களில் இந்த பஸ்கள் இயக்கப்படவுள்ளது. இதில் 198 எலக்ட்ரிக் பஸ்கள் மற்றும் 229 பஸ்கள்  சிஎன்ஜி மூலம் இயங்குபவை.

இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த பஸ்கள் பயன்பாட்டுக்கு வந்துவிடும். இந்த பஸ்களில் தானியங்கி டிக்கெட் விநியோகிக்கும் முறை கொண்டுவரப்பட உள்ளது. தற்போது டிஎம்ஆர்சி 269 பீடர் பஸ்களை பயன்படுத்தி வருகிறது. புது பஸ்கள் கொள்முதல் மூலம் பழைய பஸ்கள் அகற்றப்படும். இந்த பஸ் சேவை நொய்டா, காஜியாபாத்(உ.பி), பரிதாபாத் மற்றும் குருகிராம் ஆகிய பகுதிகளுக்கும் நீட்டிக்கப்பட உள்ளது. விரைவு ரயில் சேவை மூலம் டெல்லி மற்றும் மீரட்டை இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது’ என மற்றொரு அதிகாரி தெரிவித்தார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED உபியின் பிரபல தாதா முக்தார் அன்சாரி மாரடைப்பால் மரணம்