×

கிழக்கு மாநகராட்சி மேயர் அதிரடி மருந்துகளை வெளியில் வாங்க நோயாளிகளை அறிவுறுத்தியது ஏன்? நோட்டீஸ்

புதுடெல்லி: மருந்துகள் மருத்துவமனையில் இருந்த போதும், வெளியில் வாங்கிக்கொள்ளும்படி நோயாளிகளுக்கு அறிவுறுத்திய மருத்துவர்களுக்கு கிழக்கு டெல்லி மாநகராட்சி மெமோ வழங்கியுள்ளது. கிழக்கு டெல்லி தில்ஷாத் கார்டனில் சுவாமி தயானந்த் மருத்துவமனை உள்ளது. இங்கு இடிஎம்சி மேயர் திடீர் ஆய்வு நடத்தினார். அப்போது மருத்துவமனையில் குறிப்பிட்ட மருந்துகளின் ஸ்டாக் இருந்த போதிலும், அவர்கள் வெளியில் வாங்கி கொள்ளும்படி பரிந்துரைக்கப்பட்டனர். இதனை கண்காணித்த மேயர், மருத்துவர்களுக்கு மெமோ அனுப்பி வைக்க உத்தரவிட்டார். இதுகுறித்து இடிஎம்சி வெளியிட்ட அறிக்கை: மாநகராட்சிக்கு உட்பட்ட தயானந்த் மருத்துவமனையில் மருந்துகள் இருந்தும் நோயாளிகள் வெளியே மருந்துகளை வாங்கிக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

இதுகுறித்து விளக்கமளிக்க மெமோ அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் பணியில் அலட்சியப்போக்குடன் இருந்த காவலர்(பொறுப்பாளர்) மற்றும் இசிஜி டெக்னீஷியன் ஆகியோருக்கும் மெமோ அனுப்பப்பட்டுள்ளது. ஆய்வின் போது, மருத்துவமனை வளாகமும் தூய்மையாக இல்லை என்று மேயர் அதிருப்தி தெரிவித்தார். தெருநாய்கள் வளாகத்துக்குள் சுற்றிதிரிந்ததால், கவனக்குறைவாக செயல்பட்ட காவலாளிகள் மீதும் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். கடந்த மே 12ம் தேதி வெளியிட்ட சுற்றறிக்கையின்படி, வெளியிலுள்ள மருந்துகளை வாங்கி நோயாளிகள் பயன்படுத்த மருத்துவர்கள் அறிவுறுத்தக்கூடாது. எனினும் மருத்துவர்கள் மருந்துகளை வெளியே வாங்க அறிவுறுத்தியதற்கான காரணம் என்ன, நிர்வாகம் எடுத்துள்ள நடவடிக்கை என்ன என்பது குறித்து ஒரு வாரத்துக்குள் விளக்கமளிக்க இடிஎம்சியின் கூடுதல் கமிஷனர்(சுகாதாரம்) பிரஜேஷ் சிங் மெமோ அனுப்பியுள்ளார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED கடந்த 10 வருடங்களில் கேரளாவுக்கு...