×

டெல்லி பல்கலை. மாணவர் சேர்க்கை ஒரே நேரத்தில் பலர் விண்ணப்பிக்க முயற்சி: அட்மிஷன் இணையதளம் முடங்கியது

புதுடெல்லி: டெல்லி பல்கலைக்கழகம் கட்ஆப் பட்டியலை வெளியிட் நிலையில், சேர்க்கையை உறுதி செய்ய மாணவர்கள் பலர் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய முயன்றதால் பல்கலையின் இணையதளம் முடங்கியது. டெல்லி பல்கலைக்கழகத்தில் இளநிலை பாடப்பிரிவில் சேர விரும்பும் மாணவர்களுக்கான முதல் கட்ஆப் பட்டியலை கடந்த 19ம் தேதி பல்கலை வெளியிட்டது. அதுமுதல் குறிப்பிட்ட பாடப்பிரிவில் சேர ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பங்களை மாணவர்கள் பூர்த்தி செய்ய முயற்சித்ததால் அவ்வப்போது அட்மிஷன் போர்டல் முடங்கி, பல்கலைக்கு நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது. முதல் கட் பட்டியல் அடிப்படையிலான சேர்க்கை முடிவடைந்த நிலையில், 15,000 மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர். இது கடந்த ஆண்டை விட 7 மடங்கு அதிகம்..

ஆண்டு தோறும் அட்மிஷன் நேரங்களில் பல்கலை போர்டல் முடங்கும் என்பதால், தனிக்குழு அமைத்து பிரச்னையை உடனடியாக சரிசெய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குழுவின்  தலைவரும், பல்கலையின் கணினி மைய இணை இயக்குனருமான சஞ்சீவ் சிங் கூறுகையில், ‘மாணவர் சேர்க்கை தொடங்கிய நிலையில் பல்கலை தளத்தில் எந்த குளறுபடியும் ஏற்படாமல் இருக்க எம்எஸ்சி(இன்பர்மேடிக்ஸ்) அட்மிஷன் முடியும் வரை 24*7 மணிநேரமும் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். எனினும் பலர் ஒன்றுக்கு மேற்பட்ட அட்மிஷன் சிலிப்களை பதிவிறக்கம் செய்வதால் தளம் முடங்கிவிடுகிறது.

முதல் கட்ஆப் பட்டியலில் விண்ணப்பிக்க தகுதி இல்லாத மாணவி ஒருவர் 333 விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய முயன்றுள்ளார். குறிப்பிட்ட பாடத்துக்கு ஒரே ஒரு விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும்படி பலமுறை அறிவுறுத்தியபோதும், மற்றொரு மாணவர் 292 விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய முயன்றுள்ளார். எந்த பாடத்திற்கு விண்ணப்பிப்பது என்ற தெளிவு இல்லாத மாணவர்கள் 28,690 பேர் 2,09,607 அட்மிஷன் சிலிப்களை பூர்த்தி செய்ய முயன்றுள்ளனர். அவற்றுள் 4,562 மாணவர்கள் 10க்கு மேற்பட்ட விண்ணப்பங்களை பூர்த்தி செய்துள்ளனர். இதனால் ஆய்வு கூடம் போர்களமாக மாறியுள்ளது. பல்கலை இணையதள சர்வரும் முடங்கி வருகிறது. எப்போது வேண்டுமானாலும் மாணவர்கள் குறிப்பிட்ட பாடத்தில் சேர விண்ணப்பிக்கலாம் என்பதால் நிதானமாக ஒரே ஒரு விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய அறிவுறுத்தப்படுகிறது’.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED மணிப்பூரில் வாக்குச்சாவடியை சூறையாடிய வன்முறைக் கும்பல்!