×

ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து கந்தக அமிலம் முழுமையாக அகற்றம்

தூத்துக்குடி:  தூத்துக்குடியில் பொதுமக்கள் போராட்டத்தை தொடர்ந்து சிப்காட் வளாகத்தில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலை கடந்த 28ம் தேதி மூடப்பட்டது. இந்நிலையில் ஆலையில் இருப்பு வைக்கப்பட்டிருந்த டேங்கில் இருந்து கந்தக அமிலம் கசிவு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அங்கிருந்து கடந்த 18ம் தேதி முதல் கந்தக அமிலத்தை அகற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.நேற்று 7வது நாளாக தொடர்ந்து இந்த பணி நடந்தது. நேற்று மாலை வரை கசிவு ஏற்பட்ட டேங்கில் இருந்து முழுவதுமான கந்தக அமிலம் பம்பிங் செய்து டேங்கர் லாரிகளில் ஏற்றப்பட்டு கோவை உள்ளிட்ட தனியார் தொழிற்சாலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.இதற்கிடையே ஆலையில் இருப்பு வைக்கப்பட்டுள்ள மற்ற ரசாயனங்கள் குறித்தும் நிபுணர் குழு ஆய்வு செய்துள்ளது. அக்குழுவின் ஆலோசனைப்படி பிற ரசாயனங்கள் அப்புறப்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.




தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED கடும் வெயில் காரணமாக தமிழகத்துக்கு...