×

சில்லி பாயின்ட்...

* ஹாலே ஓபன் டென்னிஸ் தொடரின் பைனலில் குரோஷியாவை சேர்ந்த 21 வயது இளம் வீரர் போர்னா கோரிச் 7-6 (8-6), 3-6, 6-2 என்ற செட் கணக்கில் சுவிஸ் நட்சத்திரம் ரோஜர் பெடரரை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இந்த அதிர்ச்சி தோல்வியால் ஏடிபி ஒற்றையர் தரவரிசையில் பெடரர் நம்பர் 1 அந்தஸ்தை நடாலிடம் பறிகொடுத்தார்.
* துனிசியாவில் நடந்த உலக பாரா தடகள போட்டித் தொடரின் கிளப் த்ரோ பிரிவில் இந்திய வீரர் அமித் குமார் சரோஹா தங்கப் பதக்கம் வென்றார்.
* மங்கோலியாவில் நடந்த உலான்பாதர் கோப்பை குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய வீரர் மன்தீப் ஜங்ரா தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். இந்த தொடரில் இந்தியா 1 தங்கம், 4 வெள்ளி, 4 வெண்கலம் வென்றுள்ளது.
* அமெரிக்காவில் நடக்கும் உலக கோப்பை வில்வித்தை தொடரில், இந்திய வீரர் அபிஷேக் வர்மா தனிநபர் பிரிவில் வெள்ளி மற்றும் குழு பிரிவில் வெண்கலம் வென்றுள்ளார்.
* உலக கோப்பை கால்பந்து போட்டியில் சுவிஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் நடுவர் பாரபட்சமாக நடந்து கொண்டதாக செர்பியா அணி சார்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான வீடியோ ஆதாரங்களை அந்த அணி நிர்வாகம் பிபாவிடம் சமர்ப்பித்துள்ளது.
* பயிற்சியின்போது சக வீரரின் தலையுடன் மோதிக் கொண்டதில் படுகாயம் அடைந்த பெரு வீரர் ஜெப்பர்சன் பர்பான் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். டென்மார்க், பிரான்ஸ் அணிகளுக்கு எதிராக தோல்வியைத் தழுவிய பெரு அணி, அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துவிட்டது. அந்த அணி கடைசி லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது.
* இத்தாலியில் நடந்த கிரிடின் ஓபன் செஸ் தொடரில் பங்கேற்ற சென்னை சிறுவன் பிரக்ஞானந்தா, இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் மற்றும் உலக அளவில் மிகக் குறைந்த வயதில் (12 வயது, 10 மாதம்) கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற 2வது வீரர் என்ற பெருமையை பெற்றான். உக்ரைன் வீரர் செர்ஜி கர்ஜாகின் 2002ல் (12 வயது, 7 மாதம்) கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்று முதலிடத்தில் உள்ளார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED உலக சாம்பியன் பைனலுக்கு தேர்வான குகேசுக்கு உற்சாக வரவேற்பு