×

தொடர்ச்சியாக 2வது வெற்றி : சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா அசத்தல்

பிரெடா: சாம்பியன்ஸ் டிராபி ஆண்கள் ஹாக்கி தொடரில் இந்திய அணி தனது 2வது லீக் ஆட்டத்தில், 2-1 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தியது. நெதர்லாந்தில் நடைபெறும் இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா, பெல்ஜியம், நெதர்லாந்து அணிகள் களமிறங்கியுள்ளன. தொடக்க லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்கொண்ட இந்திய அணி 4-0 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்றது.

அடுத்து 2வது லீக் ஆட்டத்தில்அர்ஜென்டினாவுடன் நேற்று மோதியது. மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டியில் இந்தியா 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றியை வசப்படுத்தியது. முதல் 15 நிமிட நேர ஆட்டத்தில் கோல் ஏதும் விழாத நிலையில், 2வது குவார்ட்டரில் ஹர்மான்பிரீத் சிங் (17வது நிமிடம், பெனால்டி கார்னர்), மன்தீப் சிங் (28’) கோல் அடித்து 2-0 என முன்னிலை கொடுத்தனர். அர்ஜென்டினா தரப்பில் கோன்சாலோ பெய்லட் (30வது நிமிடம்) ஆறுதல் கோல் போட்டார். தொடர்ச்சியாக 2வது வெற்றியுடன் 6 புள்ளிகள் பெற்று முன்னிலை வகிக்கும் இந்தியா, தனது 3வது லீக் ஆட்டத்தில் உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவுடன் 27ம் தேதி மோதுகிறது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED 12 ரன் வித்தியாசத்தில் டெல்லியை...