×

போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு

சென்னை:  சென்னை மாவட்ட கலெக்டர் அன்புச்செல்வன் வெளியிட்ட செய்தி குறிப்பு: சென்னை பல்கலைக்கழகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் (பொது), சாந்தோம் ஆகியவை இணைந்து அனைத்து போட்டி தேர்வுகளுக்கும் முன்தேர்வு பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்பட உள்ளது. அதன்படி, எதிர் வரும் SSC Graduate level tier-1 போட்டி தேர்வுக்கு முன் ஆயத்த பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவுள்ளது. இந்த பயிற்சி வகுப்புகள் திங்கள் கிழமை முதல் வெள்ளி கிழமை வரை காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை மற்றும் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை சேப்பாக்கம் சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறும்.

இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மனுதாரர்கள் உரிய கல்வி சான்றிதழுடன் வரும் 29ம் தேதிக்குள், சென்னை பல்கலைக்கழக மாணவர் வழிகாட்டு மையம் இயக்குனர் அல்லது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்(பொது) சாந்தோம் அலுவலகத்தை திங்கள் முதல் வெள்ளி கிழமை வரை அலுவலக நேரங்களில் தொடர்பு கொண்டு பதிவு செய்து பயனடைய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED சென்னையில் சட்டம் ஒழுங்கு...