×

ஆழ்கடல் மீன்பிடி திட்ட மதிப்பை ரூ.1.10 கோடியாக மாற்ற வேண்டும்: வைகோ வலியுறுத்தல்

சென்னை: ஆழ்கடல் மீன்பிடி திட்டத்திற்கான மதிப்பு 1 கோடியே 10 லட்சமாக மாற்ற வேண்டும் என்று மதிமுக பொது செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:மீனவர்கள் ஆழ்கடலில் சென்று மீன்பிடிக்க வசதியாக 80 லட்சம் மதிப்பில் படகும், பரப்பு வலையும், தூண்டில், மீன்பிடி உபகரணங்கள் திட்ட மதிப்பில் அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது மீனவர்கள் இந்த திட்டத்தை செயல்படுத்த முனைப்புக்காட்டிய நிலையில், ஆழ்கடல் மீன்பிடி திட்டம் எட்டா கனியாக பாரம்பரிய மீனவர்களுக்கு தெரிகிறது. மீன்பிடி வலைகளும், சாதனங்களும் மீனவர்களே சொந்தப் பணத்தில் வாங்கவேண்டிய நிலையில் உள்ளனர். ஆழ்கடலில் மீன்பிடிக்க குறைந்தபட்சம் 5 டன் வலைகளும், சூறைமீன் தூண்டில் உபகரணங்களுக்கு 5 லட்சம் என 30 லட்சம் வரை மீனவர்கள் செலவு செய்யவேண்டிய நிலையில் உள்ளனர். இவ்வளவு பெரிய தொகையை கொடுத்து ஆழ்கடல் மீன்பிடி திட்டத்தை செயல்படுத்த முடியாது.

பாக் ஜலசந்தி பகுதியில் இழுவைப் படகுகளை குறைத்து, கடல்வளத்தை பாதுகாக்கவே இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால், இந்த திட்டம் பாரம்பரிய மீனவர்களை தவிர்த்து பெரு முதலாளிகளுக்கு கொடுக்கின்ற உள்ளடி வேலைகள் விரைவாக நடக்கிறது. எனவே மத்திய அரசு, பாரம்பரிய மீனவர்கள் பலன்பெறும் வகையில் திட்ட மதிப்பை 1 கோடியே 10 லட்சமாக மாற்ற வேண்டும் அல்லது இந்திய-நார்வே மீன்பிடி திட்டத்தில் கொடுத்தது போல அரசே ஆழ்கடல் மீன்பிடி படகினைக் கட்டி கொடுக்க வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED எரிந்த நிலையில் பெண் சடலம்: கொலையா என விசாரணை