×

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டுறவு ரேஷன் ஊழியர்கள் ஆகஸ்ட் 6ல் வேலை நிறுத்தம்: தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவிப்பு

சென்னை: கோரிக்கைகளை வலியுறுத்தி, கூட்டுறவு ரேஷன் கடை ஊழியர்கள் வரும் ஆக.6ம் தேதி வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளனர்.தமிழ்நாடு கூட்டுறவு ரேஷன் கடை ஊழியர்கள் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், வேலை நிறுத்த ஆயத்த மாநாடு சென்னை விருகம்பாக்கத்தில் நேற்று நடந்தது. தொமுச பொதுச்செயலாளர் சண்முகம், சிஐடியு பொதுச்செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, தொமுச பேரவை மாநில பொதுச்செயலாளர் பொன்ராம் உள்ளிட்ட பல்வேறு சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.சிஐடியு பொதுச்செயலாளர் கிருஷ்ணமூர்த்தி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ஸ்மார்ட் கார்டு வந்த பிறகு, பொதுமக்களுக்கு முழுமையாக பொருட்கள் கொடுப்பதில்லை. அரிசி ஒதுக்கீடு படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. உளுந்தம் பருப்பு 2 ஆண்டுகளாக நிறுத்தி வைத்துள்ளனர்.  

பொது விநியோகத்தை ஒரே துறையின் கீழ் கொண்டுவர வேண்டும். அரிசி, கோதுமை 100 சதவீதம் ஒதுக்கீடு வேண்டும் என பல கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறோம். ஆனால் அரசு இதுவரை எதையும் நிறைவேற்றவில்லை.எனவே அரசின் கவனத்தை ஈர்க்க வேலை நிறுத்தம் செய்வது தொடர்பாக தமிழகம் முழுவதும் 3 மாவட்டங்களை உள்ளடக்கிய மாநாடு நடத்தி வந்தோம். கடைசியாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை உள்ளடக்கிய மாநாடு இன்று (நேற்று) நடத்தியுள்ளோம். வரும் 2ம் தேதி கூட்டுறவு மானிய கோரிக்கை நடக்கிறது. அதில், எங்கள் கோரிக்கை தொடர்பான அறிவிப்பு வெளியாகாவிட்டால், வரும் 6ம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். தொடர்ந்து ஆக.6ம் தேதி வேலை நிறுத்தம் செய்ய உள்ளோம். ஜூலை 6ம் தேதி ஆர்ப்பாட்டம் முடிந்த பின்பு, அரசிடம் வேலை நிறுத்த நோட்டீஸ் கொடுத்துவிடுவோம். எனவே அரசு எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டத்த தீவிரப்படுத்த வேண்டும் என்று மாநாட்டில் முடிவெடுத்துள்ளோம்.



தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...