×

10 நாட்கள் விடுமுறைக்கு பிறகு சட்டப்பேரவை மீண்டும் நாளை கூடுகிறது

சென்னை: தமிழக அரசின் 2018-19ம் ஆண்டுக்கான பட்ஜெட் கடந்த மார்ச் மாதம் 15ம் தேதி சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து கடந்த மாதம் 29ம் தேதி முதல் மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடந்து வருகிறது.  கடந்த 15ம் தேதி (வெள்ளி) ரம்ஜான் பண்டிகை. அதைத்தொடர்ந்து சனி, ஞாயிறு அரசு விடுமுறை என்று தொடர்ந்து 10 நாட்கள்  சட்டப்பேரவைக்கு விடுமுறை விடப்பட்டது. இந்த நிலையில் 10 நாட்கள் விடுமுறைக்கு பிறகு சட்டப்பேரவை நாளை மீண்டும் கூடுகிறது. காலை 10 மணிக்கு சட்டப்பேரவை கூடியதும் கேள்வி நேரம் எடுத்து கொள்ளப்படும். தொடர்ந்து செய்தி மற்றும் விளம்பரம், எழுதுபொருள் மற்றும் அச்சு,  சுற்றுலா-கலை மற்றும் பண்பாடு ஆகிய மானிய கோரிக்கை மீதான விவாதம்  நடைபெறும்.

விவாதத்துக்கு செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு,  சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் பதிலளித்து பேசி,  புதிய அறிவிப்புகளை வெளியிடுவர். நாளை மறுநாள் (செவ்வாய்) காவல்  துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மானியக் கோரிக்கை மீது விவாதம்  நடைபெறுகிறது. இந்த விவாதத்துக்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி பதில்  அளித்து பேசுவார். வருகிற ஜூலை 9ம் தேதி வரை மானியக்ேகாரிக்கை மீதான விவாதம் நடக்கிறது.


நாளை நடைபெறும் கூட்டத்தில் சென்னை-சேலம் 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்; போராடியவர்கள் மீது வழக்கு பதிவு உள்ளிட்ட விவகாரம், மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணை வேந்தர் செல்லத்துரை விவகாரம், ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் நீதிமன்றமே அரசாணை குறித்து சந்தேகம்  எழுப்பியது, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு பதிவு, ஆளுநர் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் கைது மற்றும் வழக்கு பதிவு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து எழுப்ப திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள்  திட்டமிட்டுள்ளன. இதனால், நாளை நடைபெறும் கூட்டத்தில் அனல் பறக்கும் விவாதங்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாக மணல்...