×

வெற்று மிரட்டல்களுக்கு அஞ்சி நடுங்கும் இயக்கம் அல்ல திமுக..... ஆளுநர் அறிக்கைக்கு ஸ்டாலின் கண்டனம்

சென்னை: அரசியல் சட்டத்திற்கு முரணாக ஆளுநர் நேரடி அரசியல் செய்ய முயன்றுள்ளதாக தி.மு.க, செயல் தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டி உள்ளார். இது குறித்து அவர் கூறி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தி.மு.க வெற்று மிரட்டல்களுக்கு எல்லாம் அஞ்சி நடுங்கும் இயக்கம் அல்ல. தி.மு.க., வை மிரட்டும் தொனியில் அரசியல் சாசனத்திற்கு முரணாக ஆளுநர் நேரடி அரசியல் செய்ய முயன்றுள்ளார். ஆளுநரின் ஆய்வு தொடரும் என்றால் மாநில அரசின் உரிமைகளை பாதுகாக்க தி.மு.க, தொடர்ந்து போராட்டம் நடத்தும்.

நெருக்கடி என்ற நெருப்பாற்றிலேயே வெற்றிகரமாக நீந்தி வந்த இயக்கம் தி.மு.க., மாவட்ட அளவில் அரசு அதிகாரிகளை கூட்டி நடத்தப்படும் ஆய்வுக்குத்தான் தி.மு.க., எதிர்ப்பு தெரிவிக்கிறது. எதிர்ப்பின் அடையாளமாக அனுமதிக்கப்பட்ட வழக்கத்தின் அடிப்படையில் தி.மு.க., கருப்பு கொடி காட்டுகிறது. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED மதம், சாதி அடிப்படையில் பிரிவினையை...