×

கம்பம் அருகே பொதுப்பணித்துறை ஆசியுடன் கால்வாயில் தண்ணீர் திருட்டு

கம்பம்: கம்பம் அருகே பொதுப்பணித்துறையினரின் ஆசியுடன் உத்தமுத்து கால்வாயில் தண்ணீர் திருட்டு மற்றும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருவதாக  விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். கம்பம் அருகே உள்ள சுருளிப்பட்டி தொட்டன்துறையில் உள்ள மதகில் இருந்து உத்தமுத்து கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் கம்பம், அண்ணாபுரம், புதுப்பட்டி, அனுமந்தன்பட்டி, உத்தமபாளையம் பகுதிகளில் உள்ள வயல் வெளிகளில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அண்ணாபுரம் பகுதியில் உள்ள 12வது மதகில் இருந்து 15வது மதகு வரை உள்ள இடங்களில் ஆங்காங்கே சிலர் சட்டவிரோதமாக சக்தி வாய்ந்த மோட்டர்கள் பொருத்தி இந்த கால்வாயில் இரவு, பகலாக தண்ணீரை திருடுகின்றனர்.

இதனால் ஏழை, எளிய, நடுத்தர விவசாயிகள் தண்ணீர் பற்றாக்குறையால் சிரமம் அடைந்து வருகின்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், வசதி படைத்தவர்கள் ஆயிரக்கணக்கில் பணம் செலவு செய்து பொதுப்பணித்துறையினரின் ஆசியோடு கரையின் இரு புறங்களிலும் மோட்டார் பொருத்தி தண்ணீரை திருடுகின்றனர். மேலும் ஆங்காங்கே கால்வாயை ஆக்கிரமிப்பு செய்து தங்கள் நிலங்களுடன் சேர்த்து கொள்கின்றனர். இதனால் ஏழை, எளிய விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகிறோம். எனவே, தேனி மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை இந்த தண்ணீர் திருட்டை தடுக்க வேண்டும்” என்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED கடலில் 2.8 கிமீ நீளத்தில் அமைக்கப்பட்டு...