×

மத்தியப்பிரதேச வனப்பகுதியில் சிறுமியின் உடல் கண்டெடுப்பு

மத்தியப்பிரதேசம்: மத்தியப்பிரதேசம் மாநிலம் குவாலியர் மாவட்டத்தின் கேசார் பஹாரி அருகே உள்ள வனப்பகுதியில் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. மீட்கப்பட்ட சிறுமி நேற்றிரவு முதல் காணவில்லை. இதனையடுத்து சிசிடிவி காட்சிளை ஆய்வு செய்து பார்த்தபோது, காணாமல் போன சிறுமியை ஒருவர் தூக்கிச் சென்றது தெரியவந்துள்ளது. இதனையடுத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தபோது வனப்பகுதியில் சிறுமியின் உடல் இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் சம்பந்தப்பட்ட இடத்தில் ரத்தங்களும், இழுத்துச் சென்ற குறியீடுகளும் இருந்தது. இதனையடுத்து சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றும், விரைவில் குற்றவாளி பிடிபடுவார் என்றும் போலீஸ் அதிகாரி கூறியுள்ளார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு; நாளை விசாரணை!