×

இங்கிலாந்து, நியூசிலாந்து அடுத்தடுத்து உலக சாதனை

டான்டன்: மகளிர் டி20 கிரிக்கெட்டில் அதிக ரன் குவித்த அணி என்ற உலக சாதனையை நியூசிலாந்து படைத்த சில மணி நேரங்களில் இங்கிலாந்து  முறியடித்து புதிய சாதனை படைத்தது.இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையே முத்தரப்பு மகளிர் டி20 கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடக்கிறது. நேற்று  முன்தினம் காலை டான்டனில் நடந்த முதல் லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த  நியூசிலாந்து 20 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 216 ரன் எடுத்து, மகளிர் டி20 போட்டியில் அதிக ரன் குவித்த அணி என்ற புதிய உலக சாதனை  படைத்தது.

இதற்கு முன், கடந்த மார்ச் மாதம் ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்புக்கு 209 ரன் (எதிர்: இங்கி.,) எடுத்ததே சாதனையாக இருந்தது. நியூசிலாந்து அணி துவக்க வீராங்கனையான கேப்டன் பாடேஸ் 66 பந்தில் 124 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். தென் ஆப்ரிக்கா 20 ஓவரில் 6  விக்கெட் இழப்புக்கு 150 ரன் எடுத்து தோற்றது.
இப்போட்டி முடிந்த சில மணி நேரத்தில், பகல்/இரவு ஆட்டமாக தென் ஆப்ரிக்காவுடன் இங்கிலாந்து மோதியது. இதில் முதலில் பேட் செய்த  இங்கிலாந்து 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 250 ரன் குவித்து நியூசிலாந்தின் சாதனையை முறியடித்து புதிய உலக சாதனை படைத்தது. துவக்க  வீராங்கனை பெயுமான்ட் 63 பந்தில் 116 ரன் விளாசினார். அடுத்து களமிறங்கிய தென் ஆப்ரிக்கா 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 129 ரன் எடுத்து தோல்வி அடைந்தது.



தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED உலக சாம்பியன் பைனலுக்கு தேர்வான குகேசுக்கு உற்சாக வரவேற்பு