×

சிறுவாணி அணை சாலையில் மண் சரிவு சீரமைக்கும் பணி தீவிரம்

கோவை: கோவைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் சிறுவாணி அணையில் தொடர் மழை பெய்து வருகிறது. நேற்று 48 மில்லிமீட்டர் அளவுக்கும், நேற்று முன்தினம் 30 மில்லி மீட்டர் அளவுக்கும் மழை பெய்தது. அணையில் தற்போது 13.66 மீட்டர் உயரத்துக்கு தண்ணீர் உள்ளது. அணை நிரம்ப இன்னும் 1.34 மீட்டர் அளவுக்கு தண்ணீர் தேவை. தொடர் மழை காரணமாக சிறுவாணி அணைக்கு செல்லும் பகுதியில் மண் சரிவு, கற்கள் சரிவு போன்றவை தொடர்ச்சியாக ஏற்பட்டு வருகிறது.

மரங்களும் சாய்ந்து கிடக்கின்றன. இவற்றை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் துரிதமாக அகற்றி வருகின்றனர். கோவைக் குற்றாலத்தில் இருந்து சாடிவயலை தாண்டி சிறுவாணி அணைக்கு செல்லும் சாலையில்  12 வளைவுகள் உள்ளன. இதில் சிறுவாணி அணையின் அடிவாரப்பகுதியில் உள்ள விநாயகர் கோயில் அருகே 120 மீட்டர் தூரத்திற்கு மண்சரிவு  ஏற்பட்டது. இந்த சாலையை சீரமைக்கும் பணி மும்முரமாக நடக்கிறது.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED வார விடுமுறை, முகூர்த்த நாளையொட்டி...