×

மத்திய போக்குவரத்துத்துறை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை: லாரிகள் வேலைநிறுத்தம் திடீர் வாபஸ்

டெல்லி: 18-ம் தேதி முதல் நடைபெற்று வந்த லாரிகள் வேலைநிறுத்தம் திடீர் வாபஸ் பெறப்பட்டுள்ளது. மத்திய போக்குவரத்துத்துறை அதிகாரிகளுடன் பேச்சு நடத்தியதையடுத்து வாபஸ் பெறப்பட்டது. இதனால் நாளை வழக்கம் போல் லாரிகள் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கோரிக்கைகளை பரிசீலிப்பதாக அதிகாரிகள் வாக்குறுதி அளித்துள்ளதாக தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் சுகுமார் தெரிவித்துள்ளார்.

டீசல் விலையை தினமும் நிர்ணயம் செய்வதை நிறுத்த வேண்டும். பெட்ரோல், டீசல் விலையைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தை நேற்று முன்தினம் தொடங்கினர். இந்த போராட்டத்தில் பல சங்கங்கள் பங்கேற்காததால் 60 சதவீத லாரிகள் இயக்கப்பட்டன. இருப்பினும் நாடுமுழுவதும் 40 சதவீத லாரிகள் ஓடாததால் காய்கறிகள், அரிசி, சிமெண்ட், பருப்பு, உள்ளிட்ட பொருட்களை கொண்டு செல்வதில் பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் லாரிகள் வேலைநிறுத்தம் திடீர் வாபஸ் பெறப்பட்டுள்ளது.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் தகுதி...