×

நாடு முழுவதும் சிறிய விமான நிலையங்கள் அமைப்பது குறித்து மத்திய அரசு தீவிர ஆலோசனை

டெல்லி: நாடு முழுவதும் சிறிய அளவிலான விமான நிலையங்கள் அமைக்க தேவைப்படும் வழிவகைகள் குறித்து மத்திய அரசு தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது. தற்போதைய காலக்கட்டத்தில் விமானத்தில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே நாட்டின் பல பகுதிகளை இணைக்கும் வகையில் பல புதிய விமான நிலையங்களை அமைப்பதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. ஆனால் விமான நிலையங்கள் அமைக்க போதுமான இடவசதி இல்லாததால், விமானப் போக்குவரத்தை விரிவுப்படுத்தும் முயற்சியில் தேக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் குறைந்த நிலப் பரப்பில் சிறிய விமான நிலையங்களை அமைப்பது குறித்து வல்லுநர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டு வருவதாக விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் சுரேஷ்பிரபு தெரிவித்துள்ளார். ரூ.1 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில் சிறிய விமான நிலையங்கள் அமைப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார். மேலும் கட்டுமானத்திற்காக இடத்தை மாநில அரசுகள் அளிக்கும்பட்சத்தில் சிறிய விமான நிலையங்கள் அமைப்பதற்கான கட்டமைப்புச் செலவை மத்திய அரசு ஏற்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED பள்ளிக் குழந்தைகளை அடிப்பது போன்ற...