×

விவசாயிகளுக்கு தேவையான தண்ணீரை திறக்க காவிரி ஆணைய முடிவுக்காக காத்திருக்க முடியாது : முதல்வர் குமாரசாமி

பெங்களூரு : காவிரி மேலாண்மை வாரியத்தின் முடிவிற்கு காத்திருக்காமல் கர்நாடகாவில் தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டுள்ளதாக கர்நாடக முதல்வர் குமாரசாமி கூறியுள்ளார். காவிரி நீர் பங்கீடு குறித்து முடிவு செய்ய மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு, மத்திய அரசு மற்றும் தமிழக அரசு சார்பில் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் கர்நாடகா சார்பில் இதுவரை உறுப்பினர்கள் பரிந்துரை செய்யப்பட வில்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என குமாரசாமி ஏற்கனவே வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் கர்நாடக விவசாயிகளுக்கு தேவையான நீரை திறக்க காவிரி ஆணைய முடிவுக்காக காத்திருக்க முடியாது என அவர் கூறியுள்ளார். மேலும் கர்நாடக விவசாயிகளை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளதால் கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து நீர் திறக்க உத்தரவிட்டுள்ளதாக குமாரசாமி கூறியுள்ளார். மேலும் சட்ட ரீதியாக பிரச்சினை வந்தால் அதை பார்த்துக்கொள்ள தயாராக உள்ளதாகவும், தீர்ப்பாயம் கூறிய படி ஜூன் மாதத்தில் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED லாரி மீது கார் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலி: தெலங்கானாவில் கோரம்