×

வீடுகளில் வாகன நிறுத்த வசதி இருந்தால் மட்டுமே புதிய வாகனங்கள் பதிவு: கர்நாடக அரசு முடிவு

பெங்களூரு: பெங்களூருவில் அடுத்த ஆண்டு முதல் வீடுகளில் வாகன நிறுத்த வசதி இருந்தால் மட்டுமே புதிய வாகனங்களை பதிவு செய்ய கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. பெங்களூருவில் பலர் ஒன்றுக்கு மேற்பட்ட வாகனங்களை வைத்துள்ள நிலையில் போக்குவரத்து நெருக்கடி என்பது பெரிய பிரச்சனையாக உள்ளது. மேலும் அவர்கள் தங்கள் வாகனங்களை தெருக்களிலும், சாலைகளிலும் நிறுத்தி வைப்பது போக்குவரத்து நெரிசலுக்கு வழிவகுக்கிறது.

மக்கள் பேருந்துகள் உள்ளிட்ட பொதுத்துறை வாகனங்களை பயன்படுத்துமாறும், பலர் சேர்ந்து செல்லும் கார் போலிங் முறையை பயன்படுத்துமாறும் கடந்த ஓராண்டு முதல் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இந்நிலையில் வீடுகளில் வாகன நிறுத்த வசதி இருந்தால் மட்டுமே புதிய வாகனங்களை பதிய செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED அருணாச்சலப்பிரதேசத்தில் சீன எல்லையை...