×

2000 - 2015 ஆண்டு வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் தற்கொலை செய்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

டெல்லி: கடந்த 2000 - 2015-ம் ஆண்டுகள் வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் தற்கொலை செய்தவர்களின் எண்ணிக்கை 23 சதவீதம் அதிகரித்துள்ளது. 2000-மாவது ஆண்டில் தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 1,08,593 ஆக இருந்துள்ளது. ஆனால் 2015-ம் ஆண்டில் நாடு முழுவதும் தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 1,33,623 ஆக அதிகரித்துள்ளது. தற்கொலை செய்து கொள்பவர்களில் பெண்களை விட ஆண்களே அதிகம் என மத்திய அரசின் புள்ளிவிவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகுபாடுகள்,  சமூக கலாச்சார பிரச்னைகள், அதிக ஊதியத்துடன் கூடிய வேலையில் ஏற்படும் போட்டிகள் என பல்வேறு பிரச்சனைகள் இளைஞர்களின் தற்கொலை முடிவுக்கு காரணமாக இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

30 முதல் 45 வயதிற்கு உட்பட்டவர்களே அதிகளவில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இவர்களைத் அடுத்துது 18 - 30 வயதிற்குள் உள்ளவர்கள் அதிகளவில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தேசிய சுகாதார கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. தற்கொலை செய்து கொள்பவர்களில் 33 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் 30 முதல் 45 வயதிற்கு உட்பட்டவர்கள். 14 வயதிற்கு கீழ் உள்ளவர்களின் தற்கொலை விகிதம் ஒரு சதவீதமாகவும், 14 முதல் 18 வயது வரையிலான குழந்தைகள் தற்கொலை விகிதம் 6 சதவீதமாகவும் உள்ளது. 45 - 60 வயதிற்கு உட்பட்டவர்களின் தற்கொலை விகிதம் 19%-ஆகவும், 60 வயதிற்கு மேற்பட்டவர்களின் தற்கொலை விகிதம் 7.77%-வும் உள்ளது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED மீண்டும் வாக்குச் சீட்டு முறை...