×

உலககோப்பை கால்பந்து 2018: டென்மார்க்கிடம் சோபிக்குமா ஆஸ்திரேலியா?

சமரா:  உலக கோப்பை கால்பந்து தொடரில் இன்று மாலை நடக்கும்  ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் டென்மார்க் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டத்தில் யார் வெற்றி பெறுவார் என ஆடு ஒன்று  ஆருடம் பார்த்து கணித்து சொல்லி  இருக்கிறது.சி பிரிவில் இதுவரை ஆடிய ஆட்டங்களில் பிரான்ஸ் 2-1 என ஆஸ்திரேலியாவை வென்றது. டென்மார்க் 1-0 என பெருவை வென்றது. சி பிரிவின் புள்ளிப் பட்டியலில் பிரான்ஸ் மற்றும் டென்மார்க் தலா 3 புள்ளிகளுடன் உள்ளன. ஆஸ்திரேலியா, பெரு புள்ளி ஏதும் பெறவில்லை.இன்று நடக்கும் ஆட்டத்தில் டென்மார்க்குடன் ஆஸ்திரேலியா விளையாடுகிறது. பெருவை  அடித்து நொறுக்கிய கெத்துடன்  டென்மார்க் உள்ளது. பிரான்சுக்கு கடும் சவால் கொடுத்த திகைப்பில்  ஆஸ்திரேலியா களமிறங்குகிறது.

alignment=
அடுத்தச் சுற்றுக்கு முன்னேறுவது யார் என்பதை நிர்ணயிக்கக் கூடியதாக இந்த ஆட்டம் அமைந்துள்ளது. 1998ல் காலிறுதியை எட்டிய அந்த அணி 2010ல் பிரிவு சுற்றிலேயே வெளியேறியது, ஆகையால் இன்று நடக்கும் ஆட்டம் குறித்து பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆருடம் பார்த்த ஆடு ஆஸ்திரேலியா-டென்மார்க் இடையிலான இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி எதுவென்பதை ஜபியகா என்ற ஆடு கணித்துள்ளது. இந்த ஆடு  இரு நாட்டு தேசிய கொடியின் அருகில் தட்டில் வைக்கப்பட்டிருக்கும்  உணவை உட்கொள்ளாமல், ‘டிரா’ என்று அட்டையில் எழுதி வைக்கப்பட்டிருந்த அருகில் உள்ள உணவை சாப்பிட்டது. அதற்கு முன்பு இரு நாட்டு கொடிகளின்  முன்பு வைக்கப்பட்டுள்ள உணவை உண்ணாமல் ஆடு முகர்ந்து பார்த்தது. அடுத்தது டிரா என எழுதி வைக்கப்பட்ட உணவை உட்கொண்டதால் ஆட்டம் 2-2 என்கிற கோல் கணக்கில் டிரா ஆகும் என கணித்து உள்ளனர். ரஷியாவின் சமராவில் உள்ள விலங்குகள் சரணாலயத்தில் இந்த ஆடு பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆடு இந்த உலக கோப்பையை பெல்ஜியம் நாடுதான் கைப்பற்றும் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED சில்லிபாயின்ட்…