×

அர்ஜென்டினா - குரோஷியா மோதல் : மேஜிக் காட்டுவாரா மெஸ்ஸி; ரசிகர்கள் எதிர்பார்ப்பு

ரஷ்யா: உலககோப்பை கால்பந்து போட்டியில் குரோஷியாவுடனான லீக் ஆட்டத்தில் அர்ஜென்டினா வெற்றி பெறுமா என்ற பலத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ரஷ்யாவில் நடைபெற்று வரும் 21-வது உலககோப்பை கால்பந்து போட்டியில் பல்வேறு அதிர்ச்சிகளும், ஆச்சரியங்களும் நிகழ்ந்தேறி வருகின்றன. நடப்பு சாம்பியன் ஜெர்மனியின் தோல்வி, அர்ஜென்டினா மற்றும் பிரேசில் அணிகளின் தினறல் ஆகியவை முக்கிய நிகழ்வுகள்.

இந்நிலையில் இன்று மாலை 5.30 மணிக்கு தொடங்கும் இன்றைய ஆட்டத்தில் டென்மார்க் அணி ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது. இரவு 8.30-க்கு நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் பிரான்ஸ் அணி பெருவை எதிர்கொள்கிறது. இரவு 11.30 மணிக்கு நடைபெறும் முக்கிய ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் அர்ஜென்டினா அணி குரோஷியாவுடன் பலப்பரிட்சை நடத்துகிறது.

ஐஸ்லாந்துடன் நடைபெற்ற போட்டியில் கோல் அடிக்காமல் பெனால்ட்டி வாய்ப்புகளை வீணடித்த நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்ஸி இந்த ஆட்டத்தில் ஜொலிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தடுப்பாட்டத்தில் சிறந்து விளங்கும் குரோஷியா அணி வெற்றி பெற்றுவிட்டால் அர்ஜென்டினா அணிக்கு அது பெரும் சிக்கலாகிவிடும்.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED டி20 உலகக்கோப்பை 2024: தான் தேர்வு செய்த...