×

தொடரும் லாரி ஸ்டிரைக் : கோரிக்கைகளை அரசு பரிசீலிக்காவிட்டால் மேலும் சில சங்கங்கள் பங்கேற்க திட்டம்

சென்னை: லாரிகள் வேலைநிறுத்தம் இன்று 4-வது நாளை எட்டியுள்ள நிலையில், தங்கள் கோரிக்கைகளை மத்திய அரசு பரிசீலிக்காவிட்டால் போராட்டத்தை கைவிட போவதில்லை என லாரி உரிமையாளர்கள் எச்சரித்துள்ளன. டீசல் விலையை குறைத்து 3 மாதங்களுக்கு ஒருமுறை விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது லாரி உரிமையாளர்களின் முக்கிய 3 கோரிக்கைகளில் ஒன்றாகும். இவற்றை வலியுறுத்தி கடந்த 18-ம் தேதி முதல் நாடு தழுவிய அளவில் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தங்களை மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்து சுமூக தீர்வு காண வேண்டும் என அகில இந்திய தரை வழி வாகன போக்குவரத்து உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் மொத்தமுள்ள 5 லட்சம் சரக்கு லாரிகளில் சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட லாரிகள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளன. மோட்டார் காங்கிரஸ் சங்கம், பால், பெட்ரோல், மருந்து பொருட்கள் ஏற்றிச் செல்லும் 2 லட்சம் லாரிகள் இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்கவில்லை. இதில் பால் மற்றும் மருந்து பொருட்களை ஏற்றிச் செல்லும் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்க ஆலோசித்து வருகின்றனர். கோயம்பேடு லாரி சந்தைக்கு வரும் லாரிகளின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED மீண்டும் வாக்குச் சீட்டு முறை...