×

வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 123 புள்ளிகள் உயர்வு

மும்பை: இன்று காலை வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 123 புள்ளிகள் உயர்ந்து காணப்பட்டது. கடந்த வர்த்தகத்தில் குறியீடு 260.59 புள்ளிகளாக அதிகரித்துள்ளதையடுத்து, இன்று மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 123.06 புள்ளிகள் உயர்ந்து 35,670.39 புள்ளிகளாக உள்ளது. மூலதன பொருட்கள், நுகர்வோர் சாதனங்கள், உள்கட்டமைப்பு, வங்கி, ரியல் எஸ்டேட் மற்றும் எண்ணெய் மற்றும் எரிவாயு போன்ற நிறுவன பங்குகள் விலை அதிகரித்திருந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 37.55 புள்ளிகள் அதிகரித்து 10,809.60 புள்ளிகளாக உள்ளது.

அதானி போர்ட்ஸ், ஐசிஐசிஐ வங்கி, டாடா மோட்டார்ஸ், ஆக்ஸிஸ் வங்கி இன்டஸ் இன்ட் வங்கி, ஏஷியன் பெயின்ட்ஸ், ஹீரோ மோட்டோகார்ப், எல் அண்ட் டி, டிசிஎஸ், டாடா ஸ்டீல் மற்றும் பார்தி ஏர்டெல், போன்ற நிறுவன பங்குகள் விலை 2.05% வரை அதிகரித்து காணப்பட்டது.

ஆசியாவின் இதர பங்குச்சந்தையான, சீனாவின் ஷாங்காய் கூட்டுக் குறியீடு, மற்றும் ஹாங்காங்கின் ஹாங் செங் 0.84% சரிந்துள்ளபோது, ஜப்பான் நாட்டின் நிக்கேய் 0.52% உயர்ந்து காணப்பட்டது. கடந்த வர்த்தகத்தில் அமெரிக்க டவ் ஜோன்ஸ் தொழிற்துறை சராசரியாக 0.17% வரை குறைந்து முடிந்தது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED தங்கம் விலையில் அதிரடி மாற்றம் சவரன்...