×

ஹுமாயூன் கல்லறை அருகே 16ம் நூற்றாண்டை சேர்ந்த ஓவியங்கள் கண்டுபிடிப்பு

புதுடெல்லி: ஹுமாயூன் கல்லறை அருகே உள்ள சப்ஸ் புர்ஜ் நினைவு சின்னத்தின் உட்கூரையில் முகலாயர்களின் சுவர் ஓவியத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.வரலாற்று நினைவு சின்னங்கள் அமைந்துள்ள ஹுமாயூன் கல்லறையின் அருகே 16ம் நூற்றாண்டை சேர்ந்த பச்சை கோபுரம்(சப்ஸ் புர்ஜ்) ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த கோபுரத்தின் குவிமாடத்தின் உட்புறத்தில்(சீலிங்) நீலம், மஞ்சள், சிகப்பு, வெள்ளை மற்றும் தங்க நிறத்தினாலான மறைந்திருந்த ஓவியங்கள் கண்டறிந்துள்ளனர். இதுவே 16ம் நூற்றாண்டுக்கு முந்தைய முதலாவது சுவர் ஓவியம் என கலாசாரத்திற்கான ஆகாகான் அறக்கட்டளை மற்றும் இந்திய தொல்பொருள் ஆய்வு  நிறுவனம்,  ஆராய்ச்சியாளர்கள்  மற்றும் பராமரிப்பாளர்கள் வர்ணனை செய்துள்ளனர். இதன் காரணமாகவே இதனை பொக்கிஷம் என கூறுகின்றனர். பாதிப்படைந்த இந்த முகாலாயர்களின் கட்டிடத்தின் பழமையும், தொன்மையும் மாறாமல் பாதுகாக்குமு் வகையில், தைம்ரிட்  கட்டிடக்கலையை அடிப்படையாக கொண்டு ப்ளாஸ்ட்வேர், பளபளப்பான செராமிக் ஓடுகள் மற்றும் அலங்கார கூலாங்கற்களை கொண்டு செப்பனிடும் பணி கடந்த நவம்பர் மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. செப்பனிடும் பணியின் போது தான், 20ம் நூற்றாண்டில் பூசப்பட்ட சிமென்ட் மற்றும் சுண்ணாம்பு பூச்சுகளை அகற்றியபோது, இந்த சுவர் ஓவியங்கள் இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘16ம் நூற்றாண்டை இந்த இந்த கட்டிடத்தின் குவிமாடத்தின் உட்புற மேற்கூரையில் வண்ணப்பூக்களுடன் வரையப்பட்டிருந்து ஓவியங்களை கண்டுபிடித்தோம். மழைநீர் ஒழுகியதால் ஓவியங்கள் சேதமடைந்துள்ளது. இதுபோன்ற பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். பழைய காலத்து கட்டடம் என்பதால், ஆங்காங்கே பிளாஸ்டர் செய்யப்பட்ட சுவர் பெயர்ந்துள்ளது. அதை பரமரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முன், இந்த ஓவியங்கள் குறித்து ஆய்வு செய்ய உள்ளோம்’ என்றார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED விவிபேட் எந்திரத்தில் பதிவாகும்...