×

தங்கம் விலை சரிவு

புதுடெல்லி: உலகளாவிலான மாற்றம், உள்ளூர் நகை வியாபாரிகள், வர்த்தகர்கள் மற்றும் தொழிலதிபர்கள் தங்கம் வாங்கி குவிக்க ஆர்வம் காட்டாதது உள்ளிட்ட காரணங்களால் நேற்று அதன் விலை குறைந்தது. டெல்லியில் சுத்த தங்கத்தின் விலை ₹185 குறைந்து, 10 கிராம் ₹31,715க்கு விற்கப்பட்டது. எனினும் ஆபரண தங்கத்தின் விலை எவ்வித மாற்றமின்றி 8 கிராம் ₹24,800க்கு விற்பனையானது. இதேபோல் வெள்ளி உலோகத்தையும் தொழில் நிறுவனங்கள் மற்றும் நாணய தயாரிப்பாளர்கள் அதிக அளவு கொள்முதல் செய்ய முன்வரவில்லை. இதனால் நேற்று ஒரு கிலோ வெள்ளி எவ்வித மாற்றமின்றி ₹41,000க்கு விற்பனை செய்யப்பட்டது. எனினும் வாரச்சந்தையில் இதன் விலை ₹275 குறைந்து, கிலோ ₹39,730க்கு விற்பனையானது.நூறு எண்ணிக்கையிலான வெள்ளி நாணயங்களின் விலை எவ்வித மாற்றமின்றி, அதன் வாங்கும் விலை ₹76,000 ஆகவும், விற்கும் விலை ₹77,000 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED ஏப்-24: இன்று பெட்ரோல் ரூ.100.75, டீசல் ரூ.92.34 க்கு விற்பனை