×

10 வங்கியில் பலகோடி கடன் பெற்று மோசடி செய்த கேரள பாதிரியார் கைது

திருவனந்தபுரம்: கேரளாவில் 10க்கும் மேற்பட்ட வங்கிகளில் போலி ஆவணங்கள் மூலம் பல கோடி ரூபாய் விவசாய கடன் வாங்கி மோசடி செய்த  பாதிரியாரை போலீசார்  கைது செய்தனர். இது தொடர்பாக மேலும் 4 பேரை  தேடி வருகின்றனர்.கேரளாவின் குட்டநாடு பகுதியைச் சேர்ந்தவர் தாமஸ் (66). பாதிரியார். அந்த பகுதியில் ‘குட்டநாடு மேம்பாட்டு கழகம்’ என்ற பெயரில் ஒரு  அமைப்பை ஏற்படுத்தி நடத்தி வருகிறார். அதன் நிர்வாகியாகவும் இருந்து வருகிறார். இந்த அமைப்பில் அந்த பகுதியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர்  உறுப்பினர்களாக உள்ளனர். உறுப்பினர்களுக்கு வங்கியில் இருந்து விவசாய கடன் வாங்கி தருவதாக தாமஸ் கூறியதாக தெரிகிறது.அதன்படி சிலருக்கு வங்கிகளில் கடன் வாங்கி கொடுத்துள்ளார். இந்த நிலையில் ஏராளமானோரின் பெயரில் போலி ஆவணங்களை தயாரித்து  ஆலப்புழா சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த சுமார் 10க்கும் மேற்பட்ட வங்கிகளில் கோடிக்கணக்கில் விவசாயக் கடன் வாங்கி மோசடி செய்துள்ளதாக  கூறப்படுகிறது. இது தொடர்பாக ஆலப்புழா குற்றப்பிரிவு போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி குற்றப்பிரிவு டிஎஸ்பி விஜயகுமாரன்  விசாரணை நடத்தினார்.

இந்த விசாரணையில், பாதிரியார் தாமஸ் வங்கிகளில் விவசாயக் கடன் வாங்கி பல கோடி ரூபாய் மோசடி செய்தது அம்பலமானது. மேலும் இவருக்கு  உடந்தையாக வெளியநாடு பஞ்சாயத்து உறுப்பினர்கள் ரோஜோ ஜோசப், அவரது மனைவியும் குட்டநாடு மேம்பாட்டு கழகத்தின் கணக்காளருமான  திரேஷியாமா, நெல் விவசாய அமைப்பு தலைவர் தேவஸ்யா ஆகியோர் இருந்துள்ளதும் தெரியவந்தது.இதையடுத்து இவர்கள் மீது குற்றப்பிரிவு போலீசார் 14 வழக்குகள் பதிவு செய்தனர். இதில், பாதிரியார் தாமஸ் தவிர மற்ற அனைவரும்  தலைமறைவாகினர். இதற்கிடையே நேற்று முன்தினம் குற்றப்பிரிவு போலீசார் பாதிரியார் தாமசை கைது செய்தனர்.அதைத் தொடர்ந்து நேற்று அவரை ராமங்கரி நீதிமன்றத்தில் ேபாலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது அவரை வரும் ஜூலை 4ம் தேதி வரை நீதிமன்ற  காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர் ஆலப்புழா சிறையில் அடைக்கப்பட்டார்.



தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 5,000 அரிய வகை ஆமைகள் பறிமுதல்