×

போலீசுக்கு பயந்து ஓடியவர் கிணற்றில் தவறி விழுந்து பலி: வாடிப்பட்டியில் உறவினர்கள் போராட்டம்

வாடிப்பட்டி: வாடிப்பட்டியில் போலீசாருக்கு பயந்து ஓடிய வாலிபர் கிணற்றில் தவறி விழுந்து பலியானார். திண்டுக்கல் மாவட்டம், மட்டப்பாறையை சேர்ந்தவர் ஜோதிபாசு (27). டிரைவர். கபடி வீரர். இவரது மனைவி ரஞ்சனி. மகன்கள் அகிலன், முகிலன். நேற்று அதிகாலை 1 மணியளவில் மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில் தனியார் பெட்ரோல் பங்க் அருகே ஒரு வீட்டிற்கு ஜோதிபாசு சரக்கு வேனில் மணல் கொண்டு சென்றார். அப்போது அவ்வழியாக ரோந்து வந்த வாடிப்பட்டி போலீசார், மணல் குறித்து ஜோதிபாசுவிடம் விசாரிக்க முயன்றனர். போலீசாரை கண்டதும் அவர் சரக்கு வேனை நிறுத்திவிட்டு  தப்பி ஓடினார்.

அப்பகுதி முழுவதும் கும்மிருட்டாக இருந்ததால், தண்ணீரில்லாத கிணற்றில் அவர் தவறி விழுந்தார். படுகாயமடைந்த ஜோதிபாசு கிணற்றுக்குள் மயங்கி கிடந்தார். தகவலறிந்து சோழவந்தான் தீயணைப்புத்துறை வீரர்கள் வந்து அவரை மீட்டு வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே ஜோதிபாசு இறந்தார். தகவலறிந்து ஜோதிபாசுவின் உடல் வைக்கப்பட்டுள்ள வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் அவரது உறவினர்கள், நேற்று காலை திரண்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். ‘ஜோதிபாசுவின் சாவில் மர்மம் உள்ளது. சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். இல்லையென்றால் உடலை வாங்க மாட்டோம்’ என கோஷமிட்டனர். வாடிப்பட்டி போலீசார் சமரசத்துக்குப்பின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED சென்னையில் மதுபான விடுதி மேற்கூரை...