×

லாரிகள் வேலை நிறுத்தத்தால் பல கோடி மதிப்பு தீப்பெட்டி தேக்கம்

கோவில்பட்டி: லாரிகள் ஸ்டிரைக் காரணமாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள தீப்பெட்டி பண்டல்கள் தேக்கம் அடைந்துள்ளன. தமிழகத்தில் 300 பகுதி இயந்திர தீப்பெட்டி தொழிற்சாலைகளும், 25 முழு இயந்திர தீப்பெட்டி தொழிற்சாலைகள் மற்றும் கையினால் செய்யப்படும்  தீப்பெட்டி கம்பெனிகள் இயங்குகின்றன. இங்கிருந்து தீப்பெட்டி பண்டல்கள் டில்லி, பஞ்சாப், ஹரியானா, ஆக்ரா, ராஜஸ்தான், உத்தரபிரதேசம் போன்ற  பல்வேறு வடமாநிலங்களுக்கு தினமும் லாரிகள் மூலம் அனுப்பப்படுகின்றன. இந்த தொழிலை நம்பி 4 லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர்.  இந்நிலையில் டீசல் விலை உயர்வு, சுங்க கட்டணத்தை கண்டித்து நாடு முழுவதும் லாரிகள் ஸ்டிரைக் நடப்பதால் தீப்பெட்டிகளை  வெளிமாநிலங்களுக்கு அனுப்ப முடியவில்லை. இதனால ்பல கோடி மதிப்புள்ள தீப்பெட்டி பண்டல்கள் தேக்கம் அடைந்துள்ளன.

 தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் ஏற்கனவே ஜிஎஸ்டியால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது லாரிகள் ஸ்டிரைக்கால் மேலும்  பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்திய மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் லாரி ஸ்டிைரைக் காரணமாக  லோடுமேன்கள் மற்றும் டிரைவர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர் என தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.



தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED வரலாற்றில் முதன்முறையாக ரூ.50,000ஐ தொட்ட...