×

மீன்பிடி தடைக்காலத்துக்கு பின்னர் சின்னமுட்டத்தில் மீன்வரத்து அதிகரிப்பு: வியாபாரிகள் குவிந்ததால் விலை உயர்ந்தது

கன்னியாகுமரி: மீன்பிடி தடைக்காலம் முடிந்து மீன்பிடிக்கச் சென்ற சின்னமுட்டம் விசைப்படகுகளில் ஏராளமான மீன்கள் பிடிபட்டன. இவற்றை வாங்க  வியாபாரிகள் அதிகமாக குவிந்ததால் மீன் விலை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கிழக்கு கடற்கரையோரம் மீன்பிடி தடைகாலம் முடிந்து விசைப்படகுகள் மீன்பிடிக்க தொடங்கியுள்ளன. சின்னமுட்டத்தில் இருந்து  கடலுக்கு சென்று திரும்பிய மீனவர்களின் வலைகளில் வெளிநாட்டுக்கு ஏற்றுமதியாகும் கணவாய், பாறை, சீலா போன்ற மீன்கள் அதிகளவில்  சிக்கியிருந்தன.

 தற்போது மேற்கு கடற்கரையில் மீன்பிடி தடைகாலம் தொடங்கியுள்ளதால் கேரளம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மீன்வியாபாரிகள் அதிகளவில்  சின்னமுட்டத்தில் குவிந்துள்ளனர். மேலும் வெளிநாடுகளுக்கு மீன் ஏற்றுமதி செய்யும் வியாபாரிகளும் அதிகளவில் வருகின்றனர். இவர்கள் போட்டி போட்டு மீன்களை வாங்குவதால்  மீன்விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அதிக மீன் கிடைத்தாலும் வியாபாரிகளின் போட்டி காரணமாக மீன் விலை குறையவில்லை. இதனால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  பொதுமக்களுக்கு மீன் விலை குறைய இன்னும் சில வாரங்கள் ஆகும் என தெரிகிறது.



தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED தங்கம் விலை சவரன் ரூ.55 ஆயிரத்தை நெருங்கியது