×

சில்லி பாயின்ட்...

* இந்திய அணி ஆல் ரவுண்டர் ரோகித் ஷர்மாவுக்கு நேற்று நடத்தப்பட்ட யோ-யோ சோதனையில் உடல்தகுதியை நிரூபித்ததை அடுத்து, இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் பங்கேற்பதை உறுதி செய்துள்ளார்.
* சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) 2018-20123 வரை இருதரப்பு சர்வதேச தொடர்களுக்கான அட்டவணையை (ஆண்கள் அணி) அறிவித்துள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (ஜூலை 15, 2019 - ஏப். 30, 2021), ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை 2019, 2023; ஐசிசி உலக டி20 தொடர் 2020, 2021 ஆகியவற்றுக்கான அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது.
* இந்தியாவின் தேசிய விளையாட்டாக ஹாக்கியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
* மங்கோலியாவில் நடைபெற்று வரும் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய வீரர்கள் ஷிவா தாபா, சல்மான் ஷேக் இருவரும் கால் இறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
* ஐபிஎல் தொடரில் விளையாடும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சந்தை மதிப்பு ₹445 கோடியாக கணக்கிடப்பட்டுள்ளது. மொத்தம் 8 அணிகளில் சிஎஸ்கே பிராண்ட் வேல்யூவில் முதலிடம் வகிக்கிறது.
* வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் நடந்த 2வது டெஸ்ட் போட்டியின்போது பந்தை சேதப்படுத்தியதாக சர்ச்சையில் சிக்கிய இலங்கை அணி கேப்டன் தினேஷ் சண்டிமாலுக்கு ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
* பிரான்ஸ் கிராண்ட் பிரீ பார்முலா 1 கார் பந்தயத்துக்கான (ஜூன் 22-24) பயிற்சி நாளை தொடங்க உள்ள நிலையில், பெராரி அணீ வீரர் செபாஸ்டியன் வெட்டல் (121 புள்ளி), மெர்சிடிஸ் அணி வீரர்கள் லூயிஸ் ஹாமில்டன் (120), வால்டெரி போட்டாஸ் (86) ஆகியோரிடையே கடும் போட்டி நிலவுகிறது.
* ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய டேபிள் டென்னிஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்கள்: சரத் கமல், குணசேகரன் சத்தியன், அந்தோனி அமல்ராஜ், ஹர்னீத் தேசாய், மானவ் தாக்கர். மகளிர்: மனிகா பத்ரா, மவுமா தாஸ், மதுரிகா பட்கர், ஆயிகா முகர்ஜி, சுதிர்தா முகர்ஜி.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED ஐபிஎல் 2024: லக்னோ அணிக்கு 177 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது சென்னை அணி