×

242 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி

நாட்டிங்காம்: ஆஸ்திரேலிய அணியுடன் நடந்த 3வது ஒருநாள் போட்டியில் 242 ரன் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்ற இங்கிலாந்து, 3-0 என முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியது. டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற ஆஸி. முதலில் பந்துவீசியது. இங்கிலாந்து 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 481 ரன் குவித்து உலக சாதனை படைத்தது. ராய் 82, பேர்ஸ்டோ 139, ஹேல்ஸ் 147, கேப்டன் மோர்கன் 67 ரன் விளாசினர். இந்த இன்னிங்சில் 41 பவுண்டரி, 21 சிக்சர்கள் பறந்தன.

அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா 37 ஓவரிலேயே 239 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ஹெட் 51, ஸ்டாய்னிஸ் 44 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் பெரிய ஸ்கோர் அடிக்கத் தவறினர். இங்கிலாந்து பந்துவீச்சில் அடில் ரஷித் 4, மொயீன் அலி 3, வில்லி 2 விக்கெட் வீழ்த்தினர். 147 ரன் விளாசிய அலெக்ஸ் ஹேல்ஸ் ஆட்ட நாயகன் விருது பெற்றார். ஹாட்ரிக் வெற்றியுடன் இங்கிலாந்து தொடரைக் கைப்பற்றிய நிலையில், 4வது ஒருநாள் போட்டி செஸ்டர் லி ஸ்ட்ரீட்டில் இன்று நடைபெறுகிறது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED 12 ரன் வித்தியாசத்தில் டெல்லியை...