×

குடும்பம் நடத்த வருமாறு போதையில் தகராறு கூலி தொழிலாளியை கொன்ற கள்ளக்காதலி குடும்பத்துடன் கைது

வண்ணாரப்பேட்டை: போதையில் குடும்ப நடத்த வருமாறு தகராறில் ஈடுபட்ட கூலி தொழிலாளியை கீழே தள்ளி கொலை செய்த கள்ளக்காதலி குடும்பத்துடன் கைது செய்யப்பட்டார். சென்னை வண்ணாரப்பேட்டை மாடர்ன் லைன் 6வது தெருவை சேர்ந்தவர் அருண்குமார் (39). கூலி தொழிலாளி. இவரது மனைவி வாணி (33). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, வாணி குழந்தைகளுடன் பிரிந்து சென்றார். இதையடுத்து அருண்குமார், தனது தாய் சவுபாக்கியம்மாளுடன் வசித்து வந்தார். அப்போது, மாடர்ன் லைன் 8வது தெருவில் உள்ள ஒரு வீட்டின் முதல் மாடியில் வசிக்கும் பாபு மனைவி ஜோதி (30) என்பவருடன் அருண்குமாருக்கு பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் பலமுறை தனிமையில் இருந்துள்ளனர். பின்னர், இருவரும் தனிக்குடித்தனமும் நடத்தி வாழ்ந்து வந்த நிலையில், கடந்த ஓராண்டுக்கு முன் அருண்குமாருக்கும், ஜோதிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் ஜோதி, அவரை விட்டு பிரிந்து தனது குடும்பத்தினருடன் சென்றுவிட்டார். ஆனாலும் அருகுமார், அடிக்கடி அவரை தன்னுடன் குடும்பம் நடத்த வரும்படி அழைத்துள்ளார். அவர், மறுக்கவே அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அருண்குமார், மது அருந்திவிட்டு போதையில் ஜோதி வீட்டுக்கு சென்றார். அங்கு ஜோதியின் தந்தை வெங்கடசுப்பையா (60), தம்பி ராஜேஷ் (26) ஆகியோர் இருந்தனர். அப்போது, ஜோதியை தன்னுடன் வரும்படி அருண்குமார் கூறி அழைத்துள்ளார். இதை பார்த்த வெங்கடசுப்பையா, ‘‘உன்னுடன் எனது மகள் வரமாட்டாள். இனி இங்கு நீ வரவேண்டாம்’’ என கூறியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அருண்குமார், வெங்கடசுப்பையாவை அடித்து உதைத்தார். இதை பார்த்த ராஜேஷ், அவரை தடுக்க முயன்றபோது, அவருக்கும் சரமாரியாக அடி விழுந்தது. உடனே ராஜேஷ், பாபுவை செல்போனில் தொடர்பு கொண்டு, நடந்த சம்பவத்தை கூறி வரவழைத்தார். அதன்படி பாபு, அவரது உறவினர் ஜோஷ்வா ஆகியோர் ஜோதி வீட்டுக்கு சென்றனர். அவர்களிடமும் அருண்குமார் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதனால் பாபு, ஜோஷ்வா ஆகியோர் அவரை, வீட்டில் இருந்து வெளியே தள்ளி கதவை மூடினர். அப்போது, போதையில் இருந்த அருண்குமார் நிலைதடுமாறி படிக்கட்டில் உருண்டு வந்து கீழே விழுந்து படுகாயமடைந்தார். தகவலறிந்து வந்த  வண்ணாரப்பேட்டை போலீசார் அருண்குமாரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அருண்குமார் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.
இதுகுறித்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து, கள்ளக்காதலி ஜோதி, பாபு, வெங்கடசுப்பையா, ராஜேஷ், ஜோஷ்வா ஆகியோரை கைது செய்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED லஞ்சம் வாங்கிய ஆய்வாளர்கள் கைது