×

6 கோடி நிலம் அபகரித்த அதிமுக பிரமுகர் மகன் கைது

சென்னை: சென்னை திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்தவர் நந்தகோபால். ரியல் எஸ்டேட் அதிபர். நந்தகோபாலுக்கு மடிப்பாக்கம் ராம்நகரில் 6 கோடி மதிப்புள்ள 6 கிரவுண்ட் நிலம் உள்ளது. பணம் தேவை காரணமாக, சில நாட்களுக்கு முன்பு நிலத்தை விற்பனை செய்ய முடிவு செய்தார். அதற்காக, நிலம் உள்ள இடத்திற்கு சென்ற போது அந்த இடத்தில் வேறு ஒருவர் உரிமை கோரி ஆவணங்களை காட்டினார். புகாரின்படி மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்ததில், நாவலூரை சேர்ந்த பாலா, ஜான் பிரின்ஸ், நீலாங்கரையை ேசர்ந்த சதீஷ்குமார், பெருங்குடியை சேர்ந்த மோகன சுந்தரம், திலீப் குமார் மற்றும் வெளிச்சை பகுதியை சேர்ந்த தினேஷ் ஆகியோர் கூட்டாக சேர்ந்து நிலத்தை அபகரித்து பலருக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து, நாவலூரை சேர்ந்த ஜான் பிரின்ஸ் (38) என்பவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த சனிச்கிழமை கைது செய்தனர். ஜான் பிரின்ஸ் அளித்த தகவலின்படி, சென்னை வெளிச்சை பகுதியை சேர்ந்த முன்னாள் கவுன்சிலரும், அதிமுக பிரமுகருமான வேணுகோபால் மகன் தினேஷ் (32) என்பவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது ெசய்தனர். தலைமறைவானவர்களை தேடி வருகின்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED 45 வயது தாயை கழற்றி விட்ட 24 வயது காதலன்...