×

பாலியல் வழக்குகளை விரைந்து முடிக்க போலீஸ் ஸ்டேஷன்களுக்கு தடயவியல் உபகரண ‘கிட்’: மத்திய அரசு திட்டம்

புதுடெல்லி: பாலியல் தொடர்பான வழக்குகளை விரைந்து முடிக்கும் வகையில், அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களிலும் தடயவியல் உபகரண ‘கிட்’டுகளை வைக்க மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் மேனகா காந்தி உத்தரவிட்டுள்ளார். சிறுமிகளை பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்குதல் உள்ளிட்ட அம்சங்கள் பொருந்திய அவசர சட்டம் ஒன்று மத்திய அரசால், கடந்த ஏப்ரல் மாதத்தில் கொண்டு வரப்பட்டது. அதன் முக்கிய சரத்துகளாக, 12 வயதுக்கு உட்பட்ட சிறுமியை பலாத்காரம் செய்தால், 20 ஆண்டுகள் சிறை தண்டனை முதல் தூக்கு தண்டனை கிடைக்கும்; 16 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்வோருக்கு, 10 ஆண்டுகளாக இருந்த சிறை தண்டனை 20 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டது.

பலாத்கார வழக்குகளை கையாளும் விசாரணை நீதிமன்றங்கள், 2 மாதத்தில் வழக்ைக முடிக்க ேவண்டும். ேமலும், மேல்முறையீட்டு மனுக்களை 6 மாதத்தில் விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும்; 16 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்யும் நபர்களுக்கு முன்ஜாமீன் கிடையாது. பலாத்கார வழக்குகளை விரைந்து முடிக்கும் வகையில், சம்பந்தப்பட்ட ேபாலீஸ் ஸ்டேஷன்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு சிறப்பு தடயவியல் உபகரணங்கள் வழங்கப்படும். இதற்காக, மாநில அளவிலான சிறப்பு தடயவியல் ஆய்வு கூடம் அமைக்கப்படும் போன்ற அம்சங்கள் கூறப்பட்டிருந்தன. பாலியல் தாக்குதல் மற்றும் பலாத்கார சம்பவங்கள் குறித்து உடனடி மருத்துவ விசாரணை மேற்கொள்ள வசதியாக, தடயவியல் உபகரண ‘கிட்’டுகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

‘ஒரு கிட் 200 முதல் 300 ரூபாய் வரை தான் இருக்கும்; இதனை மாநில அரசுகள் வாங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதியதாக வாங்கப்பட்ட தடயவியல் கருவிகளை பயன்படுத்துவது குறித்த பயிற்சிகள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது’ என, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில், புதுடெல்லியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் மேனகா காந்தி கூறியதாவது: குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் குற்றவாளிகள் தப்புவதில் உள்ள ஓட்டைகள் கண்டறியப்பட்டுள்ளன. அதில் முக்கியமானது தடயவியல் உபகரண கிட். இதற்காக, நிர்பயா திட்ட நிதியில் இருந்து உள்துறை அமைச்சகத்தின் மூலம் திட்டம் செயல்படுத்தப்படும். அதன் ெதாடர்ச்சியாக, நாட்டில் உள்ள அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களிலும் உடனடியாக தடயவியல் உபகரண ‘கிட்’ வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக, தடயவியல் துறையினருக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED கெஜ்ரிவால் கைது குறித்து விமர்சித்த...