×

எதிர்பார்த்த தீர்ப்பு கிடைக்காததால் நீதிபதியை மேடைக்கு மேடை விமர்சிப்பது வெட்கக்கேடு..... ஐகோர்ட் கண்டனம்

சென்னை: எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் காவல்துறையினரை தவறாக பயன்படுத்துவதாக சென்னை உயர்நீதின்ற நீதிபதி கிருபாகரன் கருத்து தெரிவித்துள்ளார். ஆர்டர்லி முறையை விரும்பும் காவலர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். மற்ற காவலர்கள் போல் கஷ்டப்பட்டு பதவி உயர்வு அடைய வேண்டாம் என அவர்கள் நினைக்கிறார்கள் என நீதிபதி கிருபாகரன் தெரிவித்தார்.

காவலர்களை வீட்டு வேலைக்கு பயன்படுத்தாதீர்
காவல் உயர் அதிகாரிகளின் வீட்டு வேலைக்கு ஆட்கள் தேவைப்பட்டால் தனியாக தேர்வு செய்து கொள்ள வேண்டும் என்றும் காவலர்களை காவல் பணிக்கு மட்டுமே பயன்படுத்துங்கள் எனவும் அவர் கூறினார். குற்றவாளிகள் தாக்கப்பட்டால் மட்டும் மனித உரிமை மீறல் என கொதிப்பது ஏன்? என்றும் காவல்துறையினர் தாக்கப்படும்போது மனித உரிமை ஆர்வலர்கள் கண்டுகொள்ளாதது ஏன்? எனவும் அவர் வினவியுள்ளார்.

நீதிபதியை விமர்சிப்பது வெட்கக்கேடு
சாதகமான தீர்ப்பு வரவில்லை என்பதற்கான நீதிபதியை மேடைக்கு மேடை விமர்சிப்பது வெட்கக்கேடு என்றும் வழக்கறிஞர்களும், காவலர்களும் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்காததும் வெட்கக்கேடானது எனவும் அவர் கூறியுள்ளார்.

அமைச்சருக்கு கண்டனம்
காவலரைத் தாக்கிய ரவுடியை நேரில் சந்தித்து நலம் விசாரித்த அமைச்சர் மணிகண்டனுக்கு நீதிபதி கண்டனம் தெரிவித்தார். காவலரை தாக்கிய ரவுடியை சந்தித்தால் காவல்துறை மாண்பு குறையாதா? என அவர் கேள்வியெழுப்பியுள்ளார். ரவுடியை அமைச்சர் பார்ப்பது காவல்துறையினர் இடையே அதிருப்தியை ஏற்படுத்தும் என அவர் கருத்து தெரிவித்துள்ளார். ராமநாதபுரத்தில் போலீசாரைத் தாக்கிய ரவுடி கொக்கி குமாரை அமைச்சர் மணிகண்டன் பார்த்ததால் சர்ச்சை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED ஒன்றிய பாஜ அரசை வீழ்த்துவதற்கு...