×

பேரூர் கோயிலில் ஆனி உற்சவ விழா : நாற்று நடவில் பெண்கள் பங்கேற்பு

பேரூர்: கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் ஆனி உற்சவ நாற்று நடும் விழா நேற்று நடந்தது. காலை கோயில் நடை திறக்கப்பட்டதும் அபிஷேகம், ஆராதனை, பூஜை நடந்தது. பச்சைநாயகி அம்மன் பட்டீஸ்வரருடன் தேவேந்திர குல வேளாளர் மண்டபத்தில் எழுந்தருளினார். இதை தொடர்ந்து கோயில் ராஜ கோபுரம் முன் பொன் ஏறு பூஜை நடந்தது. பட்டீஸ்வரர், பச்சைநாயகி அம்மன் ஆகியோர் கோயில் யானை கல்யாணி மீது ஊர்வலமாக வந்து நாற்றுநடவு நிகழ்வில் பங்கேற்றனர். கோயில் முன் அமைக்கப்பட்ட நாற்றாங்காலில் இளம்பெண்களின் குலவை சத்தத்துடன் நாற்று நடவு நடந்தது.

ஆனி திருமஞ்சன நாற்றுநடவில் ஏராளமான பெண்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர். ஆனி நாற்று நடவில் பட்டீஸ்வரர், பச்சைநாயகி அம்மன் ஆகியோர் வேளாளர் போல் வேடமணிந்து நாற்று நட்டதாக ஐதீகம் உள்ளது. இதன் தொடர்ச்சி ஆண்டுதோறும் பட்டீஸ்வரர் கோயிலில் ஆனி உற்சவ நாற்று நடவு விழா விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினர் செய்திருந்தனர். விழாவை முன்னிட்டு, பேரூர் பட்டீஸ்வரர் கோயில் வழியாக சென்று வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED கடலூர் அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை...