×

சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவி அனுக்ரீத்தி 'மிஸ் இந்தியா'-வாக தேர்வு

மும்பை: 2018-ம் ஆண்டிற்கான பெமினா மிஸ் இந்தியா அழகிப் போட்டி மும்பையில் நேற்றிரவு நடந்தது. இதில் சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவி அனுக்ரீத்தி வெற்றி பெற்று 2018-ம் ஆண்டிற்கான மிஸ் இந்தியாவாக தேர்வாகியுள்ளார். இவர் ஏற்கனவே மிஸ் தமிழ்நாடு பட்டத்தை வென்றவர் ஆவார். இந்த போட்டியில் நாட்டின் பல மாநிலங்களைச் சேர்ந்த இளம்பெண்கள் இதில் பங்கேற்று பல்வேறு சுற்று போட்டிகளில் தகுதி பெற்றனர். போட்டி நடுவர்களாக கிரிக்கெட் வீரர்கள் இர்ஃபான் பதான், கே.எல் ராகுல், பாலிவுட் பிரபலங்களான மலைகா அரோரா, பாபிடியோல், குனால் கபூர், கடந்த ஆண்டின் மிஸ் இந்தியாவான மனுஷி சில்லர் ஆகியோர் இருந்தனர்.

பாலிவுட் பிரபலங்களான மாதுரி தீக்ஷித், கரீனா கபூர் மற்றும் ஜாக்குலின் பெர்னாண்டஸ் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சிக்கு வருகை தந்தனர். 30 போட்டியாளர்கள் கலந்து கொண்ட மிஸ் இந்தியா  அழகிப்போட்டியில் இறுதியாக சென்னையைச் சேர்ந்த அனுக்ரீத்தி வாஸ் மிஸ் இந்தியாவாக தேர்வு செய்யப்பட்டார்.  சென்னை கல்லூரி ஒன்றில் படித்துவரும் அவருக்கு வயது 19. போட்டியில் வெற்றி பெற்ற அனுக்ரீத்திக்கு கடந்த வருட மிஸ் இந்தியாவான மனுஷி சில்லர், கிரீடத்தை அணிவித்தார். மிஸ் இந்தியாவாக தேர்வு செய்யப்பட்டுள்ளதையடுத்து அனுக்ரீத்தி வாஸ் இந்தாண்டு நடைபெறும் உலக அழகிப்போட்டிக்கு இந்தியா சார்பில் கலந்துகொள்வார். ஹரியானாவை சேர்ந்த மீனாட்சி சவுத்ரி, ஆந்திராவைச் சேர்ந்த ஸ்ரேயா ராவ் ஆகியோர் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்திற்கு தேர்வுசெய்யப்பட்டனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED உத்தரகாண்டில் லேசான நிலநடுக்கம்